சுவாமிநாதம்73சொல்லதிகாரம்
 

வருவது என்று கருதலாம். இலக்கணப் போலி என்பது ஒருமொழியின்
பெரும்பான்மை வழக்குக்கு மாறுபட்டு வருவது. தமிழில் பெயர்ச் சொல்லை
அடுத்தே இடத்தை உணர்த்தும் விகுதி சேர்ப்பர். கைமுன், ஊர்ப்பின்
போன்றவை இவ்வுண்மையை உணர்த்தும். ஆனால் சில சமயங்களில்
இடவிகுதியை முன்னர்ச் சேர்த்து முன் + இல் > முன்றில், வாய் + இல் >
வாயில் என்பன போன்று வழங்குவர். இலக்கணத்துக்கு மாறுபட்டுவரினும்
இலக்கணம் உடையது போலக் கருதுவதால் இலக்கணப்போலி
இயல்புடையதாகக் கருதப்படுகிறது.

     சொற்களின் வடிவம் அதன் பழைய வடிவம் தெரிந்து கொள்ளாத
நிலையில் திரிந்து வருவது மரூஉ. ஆனால் எல்லா மாற்றங்களையும் மரூஉ
என்று கொண்டால் தவறில்லை. சோழநாடு > சோணாடு போன்ற மொழி
மாற்றத்தை இயல்பு என்று நம் இலக்கண ஆசிரியர்கள் கருதியது மொழி
காலந்தோறும் மாறும் என்ற அதன் அடிப்படைப் பண்பை அவர்கள் நன்கு
உணர்ந்திருந்தனர் என்று காட்டுகின்றது.

     இலக்கணம் உடையதையும் இலக்கணப் போலியையும் மரூஉவையும்
இயல்பான அதாவது இயற்கையானதாகக் கருதினர். மாறாகத் தகுதி என்பது
ஓரளவு செயற்கையானது. ஏனெனில் தகுதியாக வருகிற மூன்றும் தனக்கென
ஒரு இயல்பான பொருளோடு அதாவது நேரடிப் பொருளோடு வேறொரு
பொருளை மறைமுகமாகவும் உணர்த்துகின்றன.

     கால் கழுவி வா என்பது இடக்கர் அடக்கல். இது இயல்பாக
அமையும்போது ஒரு பொருளையும் இடக்கர் அடக்கலாக வரும்போது
மற்றொரு பொருளையும் உணர்த்துதல் தெளிவு.

     துஞ்சினார், இறைவனடி சேர்ந்தார் போன்றவை மங்கலம். இறந்தார்
என்பது அமங்கலம் (தீய நிகழ்ச்சி). ஆனால்