40. |
ஆகுபெயர் இருபெயரொட் டு,(உ)வனடி பொருண்முதலா
றாட்சி, கைமா றனபளவை காரணங்கா ரியஞ்சொன் மாகருவி,
தானி,வினை முதல்,பிறவும் பழையோர்
வழியின் ஒன்றற்கு ஒன்றுஇனமோ விட்டுவிடாது | |
இயைபாய்ப் | | |
பாகுபடச் சொற்றிடலாம், உருபுஏற்பது உருபு
பயன்மூன்றே வேறுபட்டும் வேறுபடுத் தியம்பின் போகமுற
முடித்தும்வேற் றுமையாகிப் பெயரின்
பொருளைவேற் றுமைசெய்வது எட்டுவேற் றுமையே. (7) |
ஆகுபெயர், வேற்றுமை ஆகியவற்றை விளக்குகிறது.
உரை : இரு பெயரொட்டு உவமை, முதலிய இரண்டும் பொருள்,
இடம், காலம், சினை, குணம், தொழில் முதலிய ஆறும் அளவை, காரணம்,
காரியம், சொல், கருவி, தானி வினைமுதல் ஆகியவும்பிறவும்
தொல்லாசிரியர்கள் பயின்றுள்ள பயிற்சியை ஒட்டி ஒரு சொல்லுக்கு இனமான
ஒரு பொருளைக் குறித்துச் சொற்பொருளை விட்டுவிடாமல் தொடர்புடைய
முறையில் கூறுவது ஆகுபெயர்.
உருபு ஏற்பது உருபாகும். இதன் பயன் மூன்று. 1. வேறுபடுதல் 2.
வேறுபடுத்தல் 3. வேற்றுமையை முடித்தல். இவ்வாறு வேற்றுமையாகிப்
பெயரின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை. இது எட்டு வகைப்படும்.
விளக்கம் :
இரு பெயரொட்டு ஆகுபெயர் : வகரக்கிளவி.
உவமையாகு பெயர் : கோதை (வந்தாள்).
பொருளாகு பெயர் : தாமரை முகம்.
இடவாகு பெயர் : ஊர் சிரித்தது.
காலவாகு பெயர் : கார் விளைந்தது.
சினையாகு பெயர் : வெற்றிலை விளைந்தது.
குணவாகு பெயர் : வெள்ளை அடித்தான். |