பெயராக மாறி முறையே நான், நீயிர் போன்று வருவன விகாரப் பெயர்கள் ஆகும். சாத்தன் ஆனவன் வந்தான். சாத்தி ஆனவள் வந்தாள். ஆசிரியர் ஆனவர் வந்தார். பசுவானது வந்தது. பசுக்கள் ஆனவை வந்தன. சாத்தன் ஆகிறவன் வந்தான் சாத்தன் ஆவான் வந்தான் |  | இவ்வாறு ஏனையவற்றையும் | மூன்று காலத்திற்கும் விரித்துக் கொள்ளலாம். சாத்தன் ஆன நான் வந்தேன் சாத்தன் ஆன நீ வந்தாய் - இவ்வாறே ஏனையவற்றையும் மூன்று இடத்திற்கும் விரித்துக் கொள்ளலாம். ஆனவன், ஆனவர் போன்றவை முதல் வேற்றுமை என்றது வடமொழி இலக்கணச் செல்வாக்கினாலேயே ஆகும். சாத்தன் வந்தான் என்பதும் சாத்தன் ஆனவன் வந்தான் என்பதும் ஒரே பொருளைத் தரின் ஓரளவு அதை ஒத்துக் கொள்ளலாம் ஆனால் சாத்தன் என்று அழைக்கப்படுவன் என்ற பொருளையும் தருவதால் அதை முதல் வேற்றுமை உருபாகக் கொள்ளமுடியாது. கருத்தாவாக வருதல் என்பது ஒரு செயலைச் செய்யும் வினை முதல் என்ற நிலையை வற்புறுத்துவது. சாத்தன் எழுதினான் என்னும்போது எழுதுதல் என்ற தொழிலைச் செய்தவன் என்ற முறையில் சாத்தன் கருத்தா எனப்பட்டது. சாத்தன் உண்டான் என்னும் போது உண்டான் என்னும் தொழிலைச் செய்யும் முறையில் சாத்தன் கருத்தாவே. ஆனால் உண்ணுதலின் பயனைச் சாத்தனே பெறுகிறான் |