சுவாமிநாதம்86சொல்லதிகாரம்
 

என்பதை இங்கு வலியுறுத்தவே பயனைப் பெறுதல் என்று கூறப்பட்டது.
எழுதினான் என்னும் போது எழுதுதல் என்ற தொழிலின் பயனைச் சாத்தன்
பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

     சாத்தன் பெருத்தான் என்பதில் பெருத்தல் என்ற வினையையே
சாத்தன் அடைவதால் வினையுறுதல் ஆயிற்று.

     பயனிலையை இவ்வாறு பாகுபடுத்துவது மொழி அமைப்பு அடிப்படைக்
காரணமாக இல்லாமல் தருக்க முறையை ஒட்டியது போலத் தோன்றும்.
ஆனால் உண்மை அது அல்ல என்று மொழியியலார் காட்டி இந்த முறையில்
ஆராய்ச்சியை வளர்த்து வருகின்றனர். அது Generative Semantics என்ற
பெயரிட்டு ஆராய்வதும் குறிப்பிடத்தக்கது.

     சாத்தன் சோறு உண்டான்.

     சாத்தன் புத்தகம் எழுதினான்.

இரண்டும் ஒரே மாதிரியான வாக்கியமாயினும் இரண்டும் வாக்கிய அமைப்பில்
வேறுதன்மை உடையன.

1. சாத்தான் உண்ட சோறு பெரியதாக இருக்கிறது.

2. சாத்தன் எழுதிய புத்தகம் பெரியதாக இருக்கிறது.

இங்கு முதல் வாக்கியம் தவறானது. ஏனெனில் சோறு உண்ணப்பட்டு விட்டது.
எனவே அதைப் பெயரெச்சத் தொடராக்கி நிகழ்கால வினையைப் பயன்படுத்த
முடியாது.

     இது அழித்தற் பொருள் உடையது; அதனால் அழிந்த பொருளை
நிகழ்காலத்தில் கூற முடியாது. ஆனால் புத்தகம் என்பது ஆக்கப் பொருளாக
அமைந்திருப்பதால் நிகழ்கால வினைமுற்றைப் பயன்படுத்த முடிகிறது. எனவே
செயப்படுபொருள், அழித்தல் பொருளில் வருவதற்கும், ஆக்கப்