சுவாமிநாதம்87சொல்லதிகாரம்
 

பொருளில் வருவதற்கும் தொடர்நிலையில் (Syntactical) வேறுபாடு உண்டு.
எனவே தமிழ் இலக்கண ஆசிரியர்கள் ஒவ்வொரு வேற்றுமையையும்
பல்வேறு வகையாகப் பிரித்துள்ளதைத் தொடர்நிலையில் வைத்து ஆராய்ந்து
விளக்கம் காண வேண்டும்.

     இச்சூத்திரம் இலக்கணக் கொத்து 16, 25-ஆம் சூத்திரங்களைத்
தழுவியது.

     உருபு வேறு சொல்லுருபு என்ன
     வேற்றுமை உருபு மூன்றென விளம்புவர். (இ. கொ. 16)

     எழுவாய் வேற்றுமைக்கு உருபே இன்று
     பெயரே பயனிலை கொள்ளும் தன்மையே
     பயனிலை தன்னைக் கொண்ட தன்மையே
     வினைமுதல் ஆதலே விகாரப்பெயரே
     பெயர்ப்பின் விகுதி பெறுதலே ஆயவன்
     ஆனவன் ஆவான் ஆகின்றவன் முதல்
     ஐம்பாற் சொல்லும் பெயர்ப்பின் அடைதலே
     உருபென வெவ்வேறு உரைத்தார் பலரே (இ. கொ. 25).

42. படுமெழுவாய் உருபுவினை முதல்ஏற்கும் வினை,பேர்
     பயனிலையாம்; இரண்டன்உருபு ஐயாம்;கன் மத்தின்
முடுகுசெயப் படுபொருளே யேற்கும்வினைக் குறிப்பான்
     முற்று;மூன்று (உ)ருபு ஆல்,ஆன், ஒடு,ஓடு, கொண்டு என்று
இடுதல்,வினை முதற்கருவி யுடனிகழ்வே ஏற்கும்
     இசைவினைபேர்பய னிலையா(ம்); நான்கு(உ)ருபே குவ்வாம்,
வடுவில்வினை முதல்கொள்வோன் தான்ஏற் குங்கொடை
     முன்வருவினை யுஞ்சிலபெய ரு(ம்)முடிபு கூறிடுமே.    (9)

ஒன்றுமுதல் நான்கு வரையுள்ள வேற்றுமைகளை விளக்குகின்றது.

     உரை : எழுவாய் உருபு வினைமுதலாகி வினையையும் பெயரையும்
பயனிலையாக ஏற்று வரும். இரண்டாம் வேற்றுமை உருபு ஐ யாகும். அது
கருமத்தின் செயப்படு பொருளையும் (வினை),வினைக்குறிப்பையும் ஏற்று
வரும். மூன்றாம்