சுவாமிநாதம்88சொல்லதிகாரம்
 

வேற்றுமையின் உருபு, ஆல், ஆன், ஒடு, ஓடு கொண்டு ஆகும். அது
வினைமுதல், கருவி, உடனிகழ்ச்சி ஆகிய பொருளில் வினையையும்
பெயரையும் பயனிலையாகக் கொண்டு வரும். நான்காம் வேற்றுமை உருபு
‘கு’ ஆகும். அது வினைமுதல் கொள்வோனாய்க் கொடைப் பொருளின்
வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் பயனிலையாகக் கொண்டு முடியும்.

விளக்கம் :

எழுவாய்   : அவன் வந்தான் - வினைமுதலாக வினையே ஏற்றது.
            சாத்தன் நண்பன் - பெயர் ஏற்றது.

2-ஆம் வே : சாத்தன் பழம் தின்றான் - தெரிநிலை வினை ஏற்றது.
            சாத்தன் பழம் உடையன் - குறிப்பு வினை ஏற்றது.

3-ஆம் வே : ஆல்:கத்தியால் வெட்டினான் - கருவி.
            தொல்காப்பியனால் இலக்கணம் எழுதப்பட்டது.
            வினைமுதல்.

            ஆன்: வாளான் உயிர் துறந்தான் - கருவி.

            கொண்டு: வாள் கொண்டு வெட்டினான் - ’’

            ஒடு : கண்ணனொடு முருகன் வந்தான் - உடனிகழ்வு

            ஓடு : பாலோடு தேன் கலந்தான் -         ’’

     சங்க காலத்தில் ஆன் ஆல், ஒடு ஓடு ஆகிய நான்கும் எல்லாப்
பொருளிலும் பயன்பட்டன. இடைக்காலத்தில் தான் ஆல் ஆன் கருவி,
வினைமுதல் என்ற பொருளிலும்