சுவாமிநாதம்89சொல்லதிகாரம்
 
ஒடு, ஓடு உடனிகழ்ச்சிப் பொருளிலும் வழங்கி வரத் தொடங்கின.

நான்காம் வேற்றுமை : கண்ணன் முருகனுக்குக் கொடுத்தான்
                                      - வினை முடிபு

                   கண்ணன் முருகனுக்கு நண்பன்
                                      - பெயர் முடிபு

43. கூறும்ஐந் தாம்உருபு இல்இன்னாம், ஏதுஎல்லை
     கொளுநீக்கம் உவமைஏற் பதுவினைபேர் முடிவாம்;
ஆறுஅதுஆது, அவ்,வுடைய, உருபுஏற்குங் கருத்தன்
     அவற்றினிற்றற் கிழமைசினை, குணம்,தொழிலாய்ப் பிறிதின்
பெறுபொருள், இடம்,கால மாய்ச்,சம் மந்தப்பேர்
     பெற்றுமுடித் திடும்;ஏழன் உருபுகண்,அப் பெயராம்
ஏறுபொருண் முதலறுபேர் கருத்தன்இட னாகி
     ஏற்கும்வினை பெயர்முடிவாம், எட்டுமாம் விளியே.   (10)

ஐந்து முதல் எட்டு வேற்றுமைகளை விளக்குகின்றது.

     உரை : ஐந்தாம் வேற்றுமையின் உருபு இல்லும் இன்னும் ஆகும்.
அது ஏது, எல்லை நீக்கம், உவமை ஆகிய பொருளில் வந்து வினையையும்
பெயரையும் பயனிலையாகக் கொண்டு முடியும். ஆறாம் வேற்றுமை அது,
ஆது, அ, உடைய உருபுகளை ஏற்றுத் தற்கிழமையாகச் சினை, குணம்,
தொழில் ஆகியன கொண்டும் பிறிதின் கிழமையாகப் பொருள் இடம் காலம்
ஆகியன கொண்டும் பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியும். ஏழாம்
வேற்றுமை உருபு ‘கண்’ ஆகும். அது பொருள் முதலாக ஆறையும்
கருத்தாவின் இடனாக ஏற்று வினையையும் பெயரையும் கொண்டு முடியும்.
எட்டாம் வேற்றுமை விளிவேற்றுமையாம்.

இன் : ஏது : பல்கலைக்கழகத்தின் சிறப்புற்றது சிதம்பரம்.
           (பல்கலைக்கழகம் காரணமாகச் சிதம்பரம் சிறப்புற்றது).