சுவாமிநாதம்90சொல்லதிகாரம்
 

     எல்லை : அண்ணாமலைநகரின் கிழக்கு சிதம்பரம்.

     நீக்கம்  : அண்ணாமலைநகரின் நீங்கினான்.

     உவமை : பாரியின் நல்லன் வளவன்.

     பெயரியல் 12-ஆம் நூற்பாவில் (45-ஆம் நூற்பா) ஐந்தாம் வேற்றுமை
2-ஆம் வேற்றுமையும் 4-ஆம் வேற்றுமையும் ஏற்று வரும் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. நீக்கப்பொருளும் உவமைப் பொருளுமே 2-ஆம்
வேற்றுமையில் வரும்.

     அண்ணாமலைநகரை நீங்கினான் - நீக்கம்

     பாரியை விட வளவன் நல்லவன் - உவமை

உவமைப் பொருளும் எல்லைப் பொருளும் 4-ஆம் வேற்றுமை உருபு ஏற்று
வரும்.

     பாரிக்கு வளவன் நல்லவன் - உவமை

     அண்ணாமலைநகருக்குக் கிழக்கு சிதம்பரம் - எல்லை

ஆறாம் வேற்றுமை

     அது - அரசனது தொழில்

     ஆது - தனாது ஊர்

     அ - நேற்றைய கூட்டம்

     உடைய - ஆசிரியனுடைய பெருமை

தற்கிழமை:

     சினைத் தற்கிழமை - சாத்தனது கை
                       மரத்தினது கிளை

     குணம் (பண்பு) - பூவினது வெள்ளை

     தொழில் - மாலையினது வரவு