சுவாமிநாதம்91சொல்லதிகாரம்
 

பிறிதின் கிழமை :

     பொருள் - முருகனது வேல்

     இடம் - கண்ணனது ஊர்

     காலம் - வெயிலினது காலம்

ஏழாம் வேற்றுமை :

     பொருள் இடம் - வீட்டின்கண் இருக்கும் மரம்

     இடம் இடம் - வீட்டின்கண் இருக்கும் அறை

     காலம் இடம் - சித்திரையின்கண் வீசும் காற்று

     சினை இடம் - தலையின்கண் அமைந்த நெற்றி

     குணம் இடம் - கறுப்பின்கண் மிக்குள்ள அழகு

     தொழில் இடம் - ஆடல்கண் பாடப்பட்ட பாட்டு

     நன்னூலார் ஆறாம் வேற்றுமைக்கு மட்டும் ஒருமைக்கு ஒரு உருபும்
பன்மைக்கு ஒரு உருபும் கூறியதையொட்டி இலக்கண விளக்கம், தொன்னூல்
விளக்கம், முத்து வீரியம் ஆகிய இலக்கண நூல்களும் அவ்வேறுபாட்டைக்
கூறியுள்ளன. ஆயினும் சுவாமிநாதம் அம்முறையைப் பின்பற்றாதது
பாராட்டப்பட வேண்டியது.

     ஆறாம் வேற்றுமையை ஏற்ற பெயரைக் குறிப்பு வினையாகவும்
வேற்றுமையைத் தழுவிப் பெயரை எழுவாயாகவும் கொண்டதால் எழுவாய்
- பயனிலைத் தொடர்பு (ஆனால் இங்கு பயனிலை - எழுவாய் முறையில்
வந்துள்ளது.) இருக்க வேண்டும் என்று கருதி ஒருமைக்கு அதுவும் பன்மைக்கு
‘அ’ வ்வும் உருபு என்று கூறினர். ஆறாம் வேற்றுமைத் தொடரை மட்டும்
வாக்கியமாகக் கொள்ளமுடியாது. அதையும் தொடராக (phrase) வே கொள்ள
வேண்டும். மேலும் அகரம் பயன்படுத்தப்பட்டிருக்கிற எல்லா இடத்திலும்
(நின்ன கண்ணி) பன்மையாகக் கொள்ளமுடியாது. எனவே தான் நன்னூலார்
முறையை இவர் பின்பற்றவில்லை போலும்.