நன்னூலார் ஆறாம் வேற்றுமைப் பொருளின் ஐவகைப் பிரிவும் தற்கிழமைக்கும் ஏனைய பிறிதின் கிழமைக்கும் வரும் என்றார். இலக்கண விளக்க வைத்திநாத தேசிகர் அவற்றோடு ‘பொருள், இடம், காலமாம் பிறிதின் கிழமை’ (203-5) என்று கூறினார். இருவர் கருத்தையும் ஏற்றுக் கொண்டதோடு தற்கிழமைக்குத் தொழிலும் உரியது என்று இவர் புதிதாகச் சேர்த்துக்கொண்டது பொருத்தம் உடையதே. சாத்தனின் ஓட்டம் என்பது தொழிலை ஒட்டிய தற்கிழமை. இங்குத் தொழிலையும் வினைமுதலையும் பிரிக்க முடியாது. ஆகையால் தொழிலைத் தற்கிழமை என்பது சரியானதேயாகும். ஏழாம் வேற்றுமை பற்றிய கருத்து முத்து வீரியத்தை ஒட்டியது. ‘அதன் (ஏழாம் வேற்றுமையின்) பொருள். பொருள் முதல் ஆறிரு கிழமையின் இடனாய் நிற்பது என்மனார் புலவர்’ (முவீ: 66) என்ற சூத்திரத்தோடு தொடர்பு உடையது இச்சூத்திரம். 44. | விளியேற்கும் பெயர்ஈற்றின் அயலின்அள பெழுதல், விளம்பயல்,ஈ றவைநீடல், அயல்ஈறு கெடுதல், ஒளிர்ஈறு விகுதிகெட்டு ஆவுறல்;ஆவோ வேயே யுற்றிடல்,ஈற் றயல்அஆ இஈயுற்றிடல், ஈறு அளவோடுஅயல் ஆதல்,கடை மிகுதல்,இயல் பாயணமைக்கே யுருத்தொகுத் தல்பிறவும் அவற்று உருபாந்; தெளிவாய்ஏற் பதுபடர்க்கை, ஏற்றிடின்முன் னிலையாம் செப்பு ஏவல் வினைப்பயனும் எட்டாம் வேற்றுமைக்கே. (11) | எட்டாம் வேற்றுமையின் இலக்கணம் கூறுகின்றது. உரை : விளியேற்கும் பெயர் : 1. ஈற்று அயல் எழுத்து மாத்திரை நீளுதல்; 2. ஈறு கெடுதல் 3. ஈறு நீளுதல் 4. ஈற்று விகுதி கெட்டு ‘ஆ’ விகுதி சேர்தல் 5. ஆ, ஓ, ஏ ஆகிய விகுதிகளைப் பெற்று வருதல் 6. ஈற்றயல் அ, ஆ, இ, ஈ பெற்று வருதல் 7. ஈறு |