சுவாமிநாதம்93சொல்லதிகாரம்
 
அளபெடுத்து வேறு ஒன்று மிகுதல் 8. ஈறு மிகுதல் ஆகியன அவற்றின்
உருபாம். படர்க்கை விளி உருபு ஏற்றால் முன்னிலையாகும். விடை, ஏவல்,
வினைப்பயன் ஆகிய மூன்று பொருளில் எட்டாம் வேற்றுமை வரும்.

விளக்கம் :

     1. ஈற்றயல் நீளுதல் : மக்கள் - மக்காள்

     2. ஈறு கெடுதல் : அரசன் - அரச

     3. ஈறு நீளுதல் : தம்பி - தம்பீ

     4. ஈற்று விகுதி கெட்டு ‘ஆ’ சேர்தல் : மன்னன் - மன்னா.

     5. விகுதி சேர்தல் :- ஆ : கந்தன் - கந்தா
                       ஏ : மகன் - மகனே
                       ஓ : ஐயன் - ஐயாவோ

     6. ஈற்றயல் ‘அ’ பெறுதல் :
              ‘ஆ’ பெறுதல் : இழை - இழாஅய்
              ‘இ’          :

ஈறு அளபெடுத்து மிகுதல்:
     7. சாத்தன் - சாத்தாஅ
     8. ஈறு மிகுதல் : நம்பி - நம்பீ

     தந்தை என்பது படர்க்கைச் சொல். அது தந்தாய் என்று
விளியேற்றபொழுது தந்தையாகிய நீ என்று பொருள் படுவதால் முன்னிலை
ஆயிற்று. எனவேதான் விளி ஏற்ற பெயர் முன்னிலைக்கு மட்டுமே உரியதாக
அமையும்.

     விடைப் பொருள் :
     வினாப் பொருள் : சாத்தா போவாயா
     வினைப் பயன் : சாத்தா வந்தேன்