சுவாமிநாதம்95சொல்லதிகாரம்
 

உதாரணமாக இலக்கணக்கொத்து ஆசிரியர் கொடுத்துள்ளார். அரிசியைச்
சோறாக ஆக்குகின்றான் என்ற புதைநிலை வாக்கியமே அரிசியால் சோறு
ஆக்குகிறான் என்று வந்துள்ளது என்று கருதி இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை உருபில் வந்துள்ளது என்று அவர் கருதியிருக்க
வேண்டும்.

     அவட்குக் கொள்ளும் இவ்வணிகலம் - இவளைக் கொள்ளும் இவ்வணி
என்று பொருள்படுவதால் இரண்டாம் வேற்றுமை நான்காம் வேற்றுமை
உருபில் வந்துள்ளது.

     பழியின் அஞ்சும் (பழியை அஞ்சும்): 2ஆம் வேற்றுமைக்கு
     ஐந்தாம் வேற்றுமை உருபு வந்துள்ளது.

     நூலது குற்றம் கூறினான் - நூலைக்குற்றம் கூறினான் -
     6 ஆம் வேற்றுமை ஏற்றது.

     கோட்டின்கண் குறைத்தான் - கோட்டைக் குறைத்தான்
     7ஆம் வேற்றுமை ஏற்றது.

     நான்காம் வேற்றுமையும் ஏனைய எல்லா வேற்றுமை உருபைப் பயன்படுத்திக் கொள்ளும்.

1 ஆம் வே : இரப்பவர் என் பெறினும் கொள்வர் - இரப்பவர்க்கு என்ன
            கொடுத்தாலும் கொள்வர் (இலக்கண விளக்கத்தில் உள்ள
            உதாரணம்.)

2 ஆம் வே : செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் (குறள்167) - திருமகள்
            தவ்வைக்குக் காட்டிவிடும்.

3 ஆம் வே : நாகராற்பலி - நாகர்க்குப்பலி

5 ஆம் வே : அவனின் இவன் நல்லன் - அவனுக்கு இவன் நல்லன்

6 ஆம் வே : நாகரது பலி - நாகர்க்குப் பலி