சுவாமிநாதம்97சொல்லதிகாரம்
 

     ஒரு பொருளுக்குப் பல வேற்றுமை என்பது கருவிப் பொருள் மூன்று,
நான்கு, ஐந்து வேற்றுமை உருபுகளால் உணர்த்தப்படுவது போன்றது. இது
பொருள் மயக்கத்தைக் குறிக்கும்.

     ஒவ்வொரு வேற்றுமையும் பொருள் வேறுபடுதல் என்பது மூன்றாம்
வேற்றுமை, கருவி, கருத்தா, உடனிகழ்வு போன்று பல பொருளில் வருவது
போன்றது.

     வேற்றுமை தன் பொருளை விட்டு விட்டுப் பொருளைத் தருதல்
என்பது உருபு மயக்கம் ஆகும்.

     நம்பிக்கு மகன் என்னும் போது ‘கு’ என்ற நான்காம் வேற்றுமை,
தன் பொருளை விட்டு விட்டு ஆறாம் வேற்றுமைப் பொருளைத் தருகின்றது.

     இச்சூத்திரம் இலக்கணக்கொத்து 22, 45, 47, 46, 48, 49, 50, 23 ஆகிய
சூத்திரங்களைத் தழுவியது.

     ஒரு வேற்றுமைக்குப் பல உருபு வருதலும் (இ. கொ. 22.2)

     எல்லா உருபொடும் செயப்படுபொருள் எழுமே (இ. கொ. 45)

     எல்லா உருபொடும் கொள்வோன் வருமே (இ. கொ. 47)

     ஒன்று மூன்று நான்கு ஐந்து ஆறு உருபொடு கருவி வருமெனக்
     கருதினர் பெரியோர் (இ. கொ. 46)

     இரண்டு நான்கு ஐந்தொடும் எழுமே (இ. கொ. 48)

     நான்கு ஐந்து ஆறு ஏழொடு குறை நடக்கும் (இ. கொ. 49)

     ஒன்று இரண்டு நான்கு ஏழொடு இடம் எழும் (இ. கொ. 50)

     ஓர் உருபிற்கே பல பொருள் வருதலும்
     ஒரு பொருட்கே பல உருபுகள் வருதலும்
     என இரண்டாகும் வேற்றுமை இயல்பே (இ. கொ. 23).