சுவாமிநாதம்117

3. எச்ச மரபு

54. உருபுசாரி யைவிகுதி இடைநிலையே இசைகொள்
ஒப்பசைதத் தம்பொருள்கோள் எழுத்தணவல் ஒன்பான்
கருதியவுந் தனித்தியலா தப்பெயரின் வினையின்
கடைஇடைமுன் னொன்றுபல வருதல்இடைச் சொல்லாம்;
வருபொழுது சிலஈறு திரிந்தும்வரும் அவற்றுள்
மறைதேற்றம் பிரிவுஎண்வினா ஈற்றசைஆறு ஏயாம்
தெரிவுமறை யாக்கம்எச்சம் ஐயம்முற் றுஎண்ணுடனே
சிறப்பொடுஉம் மையெட்டாம் வேறு அசைநிலை
 

மற்றாமே. (1)

 

இடைச்சொல்லின் பொது இலக்கணம் ஏ, உம், மற்று ஆகியவற்றின் சிறப்பிலக்கணமும் கூறுகின்றது.

உரை : 1. வேற்றுமை உருபுகள், 2. சாரியைகள், 3. வினையில் வரும்
விகுதிகள், 4. காலத்தைக்காட்டும் இடைநிலைகள், 5. இசை நிறைத்தற்கு
வருவன, 6. உவமை உருபுகள், 7. அசைச்சொற்கள், 8. தத்தமக்குரிய
பொருளை உணர்த்தி வருவன, 9. எழுத்தணவல் என்று ஒன்பது வகையாய்த்,
தனித்து இயங்க முடியாத தன்மை உடையதாய்ப், பெயர்ச்சொல்லுக்கும்
வினைச்சொல்லுக்கும் முன்னும் பின்னும் நடுவும் ஒன்றோ பலவோ வருவது
இடைச்சொல்லாகும்.