சுவாமிநாதம்12நூல் வழி
11. உடன்படாபிறன் கோட்கூறு தல்தொடர்ச்சொற் புணர்த்தல்
      ஒன்றெனத்தன் னினமுடித்தல் ஒப்பின்முடித் திடலே
முடிந்ததனை முடித்தல்இரட் டுறமொழிதல் முன்னே
     மொழிந்துகொளல் பின்னிறுத்தல் இன்னதன்று ஈதுஎன்றல்
மிடைந்தசொல்லின் முடிவினில்இப் பொருள்சொலல் சொற்
 

பொருளே

 
      விரித்தல்இறப் பகற்றல்எதிர் போற்றல்முப் பான்இரண்டும்
இடஞ்செயநூற் பொருள்வழக்கோடு உணர்த்தி ஏற்புழி
    யோர்ந்துஇதற்கிதாம் எனச்செலுத்துந் தந்திரவுத் திகளே.
 

(10)

 

உரை : 20. உடன்படாத பிறன் கோட்கூறல் (தான் ஒத்துக் கொள்ளாத
பிறர் கருத்துக்களை கூறுதல்) 21. தொடர் சொல் புணர்த்தல் (ஒன்றுக்கொன்று
தொடர்பு உடைய சொற்களைச் சேர்த்தல். 22. ஒன்றெனத் தன்னினம்
முடித்தல் (ஒன்றைச் சொல்லுமிடத்து அதற்கு இனமாகிய மற்றொன்றையும்
அதனோடு முடித்தல்) 23. ஒப்பின் முடித்திடல் (ஒன்றிற்குச் சொல்லப்படும்
இலக்கணம் வேறொன்றிற்கும் ஒத்து வருமாயின் அதற்கு அதுவே
இலக்கணமாக உடன் முடிவு செய்தல்) 24. முடிந்ததனை வைத்தல்
(வெவ்வேறாக முடிந்ததைப் புலப்பட வேண்டித் தொகுத்து முடித்தல்) 25.
இரட்டுற மொழிதல் (ஒரு தொடரை இரண்டு பொருள்படச் சொல்லுதல்) 26.
முன்னே மொழிந்து கொளல் (பின்பு வேண்டும் இடந்தோறும் எடுத்தாளும்
பொருட்டு முன்னே ஒன்றனைச் சொல்லிக் கொள்ளுதல்) 27. பின்னிறுத்தல்
(ஒரு பொருளுக்குக் கருவியாக முன் வைத்தற்குரியது அங்கே வைப்பதற்கு
இடம் பெறாவிட்டால் அப்பொருளின் பின்னால் அதனை வைத்தல்) 28.
இன்னதன்று ஈது என்றல் (சந்தேகப்பட்டபோது இத்தன்மையது அன்று
இத்தன்மையை உடையது என்றல்) 29. மிடைந்த சொல்லின் முடிவினில் இப்
பொருள் சொலல் (சொல்லின் முடிவிலே அதன் பொருளையும் முடித்தல்)
30. சொற்பொருள் விரித்தல் (சொல்லினது பொருள் விளங்குதற்கு உருபு
முதலியவைகளை விரித்துச்