சுவாமிநாதம்160சொல்லதிகாரம்
 
70. உயர்பு, இழிபாந், திணையியற்பேர், அப் பொருளிற்சாதி
     யொருமை பன்மை; யொருசொல் நின்று தனித் தனி மேவு
                                            தலாய்ப்
பயில் பிரிவு ஏழாம்; எழுத்துச் சொற் பொருளிற் றிரிபாம்,
     பலசொல் ஓர் சொல்லாம்; ஓர் சொற் பல சொல்லாகும்.
இயலும் இடுகுறியே காரணமாம், காரணமே
     யிடுகுறியாம். பழைய கழிதலும் புதிய புணர்பும்
அயரும் வழுவல காலத்தற்றாஞ், சான்றோர்கள்
     அமை அடங்காது எனினும் இவற்றமைக்க அறிந்தோரே.
                                                [17]

பொதுச் செய்திகள் சிலவற்றை விளக்குகின்றது.

     உரை : 1. உயர்திணை இயற்பெயர் 2. அஃறிணை இயற்பெயர்,
3. உயர்திணைப் பொருளில் சாதியொருமை, 4. உயர்திணைப் பொருளிற்
சாதிப் பன்மை, 5. அஃறிணைப் பொருளிற் சாதி ஒருமை. 6. அஃறிணைப்
பொருளிற் சாதிப் பன்மை, 7. ஒரு சொல் நின்று தனித்தனி உதவுதல் என
ஏழு வகையாகவும் பிரிக்கலாம்.

     பல பொருளையும் குறிப்பதற்குரிய பல சொல்லும் ஒரே சொல்லாக
அமைதலும் (பல பொருட் ஒரு சொல்) ஒரு பொருளைக் குறிக்கப் பல
சொல் அமைதலும் (பல சொல் ஒரு பொருள்) உண்டு.

     ஒரு காரணத்தால் இடுகுறிப்பெயர், காரணப்பெயராகவும் காரணப்பெயர்
இடுகுறியாகவும் அமையலாம்.

     முற்காலத்துள்ள இலக்கணங்களும் சொற்களும் பிற்காலத்தில் சில
மறைந்து போதலும் புதியதாகச் சில உண்டாதலும் தவறு இல்லை. அது
காலத்து இயல்பாகும்.

விளக்கம் :

     இறை, அமைச்சு என்பன உயர்திணை இயற்பெயர்.
     கல், பகல் என்பன அஃறிணை இயற்பெயர்.