சுவாமிநாதம்163
 

4. பொருளதிகாரம்

1. அகத்திணை மரபு

71. அறமுதனான் கினில்வீடு சொலற்குஅரிது ஆகையினால்
     அறம்,பொருள்,இன் பமும்,பொருளாம்; அவற்றின் அறம்,
                                         பொருளே,
புறம்அதுவாம்; இன்பம்அகஞ்; செய்யும்அணிக்கு இசைவாள்;
     புறநிற்க, அகப்பொருள்கைக் கிளையொடுஐந் திணையே
                                         நிறிய
பெருந்திணைஏ ழாய்ப் புனைந்து உரையும்உலக
     நெறியும் வழாஅது (உ) ரைப்பனவாம்; அவற்றினிற்கைக்
                                         கிளையே
கறுவில்ஒரு தலைக்காமம்; ஐந்திணைஅன் புடைய
     காமம்,இசை யாக்காம மாதல்பெருந் திணையே.     (1)

இது அகத்திணை வகையை விளக்குகின்றது.

     உரை : அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கினுள் வீடு
எடுத்துச் சொல்லுவதற்கு அரிது; ஆகையால் அறம், பொருள், இன்பம்
என்ற மூன்றே பொருளாகக் கருதப்படுகிறது. அறமும் பொருளும் புறத்திலும்
இன்பம் அகத்திலும் அடங்கும். அகப்பொருள்