85. | மருவுறும்அன் புஐந்திணையிற், களவுவே தத்தின் மன்றல்எட்டிற் கந்திருவ வழக்கம்தாம்; பின்மூன்று ஒருதலைக்கா மமும்முன் னான்குஒவ்வாக் காமமுமாம்; உரைத்ததின்முன், காட்சிஐயம், துணிவு,குறிப் பறிதல், விரவும்ஊழ் முயற்சையினால் ஒத்தகிழவோனும் மின்னுங்காண் பதுகாட்சி; யவள்உருவும் இடமுந் திருவுறவெய் தூதுஐயம்; கடவுள்வேற் றுமையால் தெளிதல்,துணிபு; அவள்கண்ணால் அறிதல்குறிப்பறிவே. [1] | இது களவு, கைக்கிளை, ஆகிய இரண்டையும் விளக்குகிறது. உரை : ஐந்திணை ஒழுக்கத்துள் களவு என்பது, வேதத்துள் சொல்லப்பட்ட 1. பிரமம், 2. பிரசாபத்தியம், 3. ஆரிடம், 4. தெய்வம், 5. காந்தருவம், 6. ஆசுரம், 7. இராக்கதம், 8. பைசாசம் என்ற எட்டு வகைத் திருமணத்துள் காந்தருவ மணத்தோடு ஒத்தது. பின்னால் உள்ள ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்ற மூன்று வகையும் கைக்கிளைக்கும், முன்உள்ள பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் என்ற நான்கு வகையும் பெருந்திணைக்கும் உரியவாம். முன் சொன்ன கைக்கிளை என்பது 1. காட்சி, 2. ஐயம், 3. துணிவு, 4. குறிப் |