செல்லும் செலவு கண்டு தலைமகன் தன் நெஞ்சோடு சொல்லுதலும் 2. தன் கருத்தை உணர்ந்து கொள்ளும் பாகனோடு சொல்லுதலும் என இரண்டு வகையாய்ப் பிரிந்துழி மகிழ்ச்சி வரும். விளக்கம் : இது நம்பியகப் பொருள் 128, 129, 130, 131 ஆகிய சூத்திரங்களைப் பின்பற்றியது. பா. வி நெஞ்சொடுகோன் சொல்லும் என்பது (3வது வரி) சொல்லலும் என்று இருக்கவேண்டும். 89. | மருண்டு(உ)ரைத்தல், தெருண்டு(உ)ரைத்தல், இரண்டதாய் ஆயம் வழிபடலால் மாயம் என்றல், வாயில்பெற்றே உய்தல், இருபண்பு கூறல்,பயந் தோர்ப்பழிச்சல், உறங்காது இரவு(அ)ழுங்கல், ஐந்துபிரி வுழிக்கலங் கலாகும்; தருந்தெய்வம் தெளிதல், கூடுதல்,விடுத்தல், மூன்றாய்த்; தந்ததெய்வம் தரும் எனச்சொல் லுதல்,எதிரே காண்டல் விரைந்துபுண ருதல்,புகழ்தல் ஆயத்தொடு (உ)ய்த்தல், விளம்பும்ஐந் துறையும்இடந் தலைப்பாட்டின் சார்பே. [5] | பிரிவுழிக்கலங்கல், இடந்தலைப்பாடு என்ற இரண்டையும் விளக்குகின்றது. உரை : 1. மருண்டு சொல்லுதல், 2. தெருண்டு உரைத்தல் என இரண்டு பெரும் பிரிவும் 1. ஆயம் வழிபடு தலைக்கண்டு இது மாயமோ என்று கூறுதல், 2. வாயில் பெற்று உய்தல், 3. பண்பு பாராட்டுதல், 4. பெற்றோரைப் பாராட்டுதல், 5. உறங்காது இரவு வருந்துதல் என்ற ஐந்து சிறு பிரிவும் பிரிவுழிக்கலங்கல் என்ற துறையைச் சார்ந்தன. 1. தெய்வம் தெளிதல் 2. கூடுதல், 3. விடுத்தல் என்ற மூன்று பெரும் பிரிவும் 1. (முன்னர் தலைவியைத்) தந்த தெய்வம் (மீண்டும்) தரும் எனச் செல்லுதல், 2. எதிரே காண்டல் 3. உடன் புணருதல், 4. புகழ்தல் 5. ஆயத்தோடு அவளைச் சேர்ப்பித்தல் என ஐந்து சிறு பிரிவும் இடந்தலைப்பாட்டிற்கு உரியன. |