92. | ஐய்யமறப் பிறைதொழுகென் றிடல்,கரந்து வினவல், அவள்கரவு தரவுணர்தல், சுனை வியத்தல், நாணச் செய்தல்,தகை யணங்குறுத்த, னடுங்கநா டுதலே, சிலதியைக்கண்டு இரவுறுத்தல், கையுறைகொண் டூர்,பேர், மொய்கெடுதி, வழியிடைபே சாமை,நெஞ்சம் வினவல், முகம்புகுதல், எண்ணம்யாதுஇவர் ஆர்என்று ஓர்தல், மெய்தெளிதல், கையுறைகொண்டு அவ்வகைகேட் டிடல்,பின் விடைதகைமெய் யுணர்தல்முப் பான்மதியுடன்பாட் டிருப்பே. [8] | இது பாங்கிமதி உடன்பாட்டை விளக்குகிறது. உரை : 1. பாங்கியின் ஐயம் நீங்குவதற்காகத் தலைவியைப் பிறையைத் தொழுமாறு வேண்டுதல், 2. மறைமுகமாக வினவுதல், 3. தலைவியின் களவை உணர்ந்து கொள்ளுதல், 4. சுனையை வியந்து உரைத்தல், 5. தலைவியை வெட்கமுறும்படிச் செய்தல், 6. தகையணங்கு உறுத்தல், 7. நடுங்கநாடுதல், 8. தோழியைக் கண்டு இரவு வலியுறுத்தல், 9. கையுறை எடுத்துக்கொண்டு ஊர் வினாதல், பெயர் வினாதல், 10. கெடுதி வினாதல், 11. போகும் வழியில் பேசாமை, 12. உள்ளக் கருத்தை வினவுதல், 13. பார்க்க விரும்புதல், 14. யார் என எண்ணுதல், 15. இவர் யார் என்று ஆராய்தல், 16. உண்மை தெரிந்து கொள்ளுதல், 17. கையுறையைக் கொண்டு ஊர், பேர் முதலியவற்றைக் கேட்டிடல், 18. பின்னால் விடை கூறுதல், 19. நகைத்தல், 20. உண்மையை உணர்ந்து கொள்ளுதல் ஆகிய இருபதும் மேலே கூறிய பத்தும் (பாங்கி மதியுடன்பாடு மூன்றும் முன்னுற வுணர்தல் ஏழும்) சேர்ந்து முப்பதும் மதியுடன்பாட்டின் வகையாம். விளக்கம் : இது அகப்பொருள் 132ஆம் சூத்திரத்தைத் தழுவியது. 93. | இரவு,சேட் படை,மடலின் கூற்று,மடல் விலக்கே, மிசைதல்மடல் கூற்று,ஒழிதல், குறைநயப்பித் திடலே, விரிநயத்தல், கூட்டல்,கூ டுதல்,ஆயங் கூட்டல், வேட்டல்ஈ ரறுவகைத்தாய்த்; தலைவன்உட்கோள் சாற்றல் | |