சுவாமிநாதம்187பொருளதிகாரம்
 

7. தோழி அச்சுறுத்தல் 8. நீங்குவதற்குரிய துன்பம் நினைந்து தலைவி
இரங்குதல் 9. தலைவனுடைய வரவைத் தோழி கூறுதல்.

     விளக்கம் : இது அகப்பொருள் 152, 153, 154 ஆகிய சூத்திரங்களைத்
தழுவியது.

98. சிறைப்புறமாச் செறிப்புஉணர்த்தல், முல்லையின்பு றச்சொற்
     செப்பியுணர்த்து தல்,முன்னின்று உணர்த்துதல்,முன்னின்
                                        றுஉணர்த்தி
உறுத்தி ஓம் படை சாற்றல், தஞ்சம் இலாது இறை நெஞ்
     சொடுகிளத்தல், ஈரேழும் ஒருசார்எற் குறியாந்;
தறுக்கல்,செல் லல், கலக்கம் மூன்றாய்;அவ னைஅவளைச்
     சகிகுறியின் விலக்கல்,இடம் பார்த்துஅழிதல், அகறல்,
குறிக்கண்இறை சென்றுஇரங்கல், வறுங்களம்பார்த்து அழுங்கல்,
     குறிச்சியெண்ணி மதி மயங்கல், பகல் இடையீடு ஏழே. [13]

இது பகற்குறியும் பகற்குறி இடையீடும் உணர்த்துகின்றது.

     உரை: 10. தோழி சிறைப்புறமாகத் தலைவியின் செறிப்பு (வீட்டிலேயே
வைக்கப்பட்டது) கூறுதல் 11. தோழி தலைமகனுக்கு முன்னிலைப் புறமொழி
கூறி இற்செறிப்பை உணர்த்துதல், 12. முன்னே நின்று செறிப்பு அறிவித்தல்,
13. முன்னே நின்று செறிப்பு உணர்த்தி ஓம்படை கூறுதல், 14. அடைக்கலம்
பெறாது தலைமகன் தன் நெஞ்சோடு பேசுதல் என்ற பதினான்கும் பகற்
குறியின் வகையாகும். 1. விலக்குதல், 2. செல்லுதல், 3. கலங்குதல் என
மூன்றுபெரும் பிரிவையும் 1. தோழி முன்னர் குறிப்பிட்ட குறியிடம் தலைவன்
சென்று வருதலை விலக்குதல், 2. அவ்விடத்திற்குத் தலைவி சென்று
வருந்துதல், 3. குறியிடம் கண்டு தலைவி வருந்துதல் 4. அவ்விடத்தை விட்டு
நீங்குதல், 5. தலைவன் குறியிடம் சென்று வருந்துதல், 6. வறிய களத்தைப்
பார்த்து அழுங்குதல், 7. தலைவி வாழும் ஊரை எண்ணி அறிவு தடுமாறுதல்
எனஏழுவகைச் சிறுபிரிவினையும் பகற்குறி இடையீடு (இடையூறு) என்பர்.