கொண்டதைத் தலைவனுக்குக் கூறுதல், 11. தலைமகள் குறியிடத்துக் கொண்டு வந்து நிறுத்தி வைத்துத் தாய் தூங்குகிறாளா என்று உணர்தல். விளக்கம் : நம்பியகப்பொருள் 157-ஆம் நூற்பாவின் தழுவல் முதல் இரண்டு வரி. ஆனால் கூட்டல், பாங்கிற் கூட்டல் என்று இருவகையாக அகப்பொருளில் இருப்பதைக் கூட்டல் என்று ஒன்றாக்கியதால் இங்கு எட்டுவகையே அமைந்துள்ளது. 158 - 11 வரி வரையுள்ள பகுதியின் தழுவல் பின்பகுதி. பாட விளக்கம் : ‘பகா வேண்டல்’ என்ற (முதல் வரி) மூலபாடம் பகர்வேண்டல் என்று திருத்தப்பட்டுள்ளது. 100. | ஓர்ந்துஇறைவிக் குஇறைவரவு சொல்அவட்கொண் டேகல் உடன்குறிஉய்த்து அகறல்அவன் எதிர்ப்படல்ஆற் றருமை தேர்ந்தவன்ஏங் குதல்இறைதேற் றுதல்புணர்தல் புகழ்தல் திருஅவனைக் குறிவிலக்கல் அவன்அவளை விடுத்தல் சார்ந்துஇகுழை கையுறைகாட் டுதல்இற்கொண்டு ஏகல் சகிபிற்சென்று இறைவரவை விலக்கல்இறை மயங்கல் கூர்ந்துஇறையைச் சகிஇறைவி துயர்கிளந்து விடுத்தல் கொற்றவன்செல் லுதல்இருபத் தேழும்இராக் குறியே [16] | இரவுக்குறியின் தொடர்ச்சி உரை: 12. தாயின் தூக்க நிலையை அறிந்துகொண்டு தலைவிக்குத் தலைவன் வந்திருப்பதைக் கூறுதல், 13. தலைவியை அழைத்துக்கொண்டு குறியிடம் செல்லுதல், 14. தலைவியைக் குறியிடம் சேர்த்தபிறகு தோழி நீங்குதல், 15. தலைவனைத் தலைவி நேரே பார்த்தல், 16. தலைவன் வரும் வழியின் துன்பங்களை அறிந்து தலைவி ஏங்குதல், 17. தலைவன் தலைவியைத் தேற்றுதல், 18. புணர்தல், 19. புகழ்தல், 20. தலைமகள் தலைமகனைக் குறிவிலக்குதல், 21. தலைமகன் தலைமகளை வீட்டிற்குப் போகவிடுதல், 22. தோழி தலைமகளை அடைந்து கையுறையைக் காட்டுதல், 23. தோழி தலைமகளை |