சுவாமிநாதம்197பொருளதிகாரம்
 
107. வம்பல என்று இறைவி சொல், அவர்தூதாய் அப்பருவம்
     வந்தெனச் சகி சொலல், பெண்ஆற்றல், சென்ற இடத்து
நம்பி புலம்புதல், வருங்காற்பாகன், முகிலுடன், கோன்
     நவின்று இரங்கல், வலம்புரி கேட்டவன் வரவு கூறல்,
கம்பைமின்னாள் வாழ்த்துதல்,வந்தோனுடன் நினைப்பு வினவல்,
     காளைநினைத்தமை கூறல் அவனை ஆற்றுவித்த
சொம்பு சொல் எனமூவேழும் பொருட்பிரிவாம், களவின்
     துறை ஏழிலா முன்னூறு என்பர்இரு நிலத்தே.     [23]

இது வரைவு இடைவைத்துப் பொருள்வயிற்பிரிதல் விளக்குகின்றது.

     11. பருவம் இல்லாத பருவம் இல்லை, சரியான பருவமே என்று தலைவி
கூறுதல், 12. தலைவருடைய தூதாகப் பருவம் வந்தது என்று தோழி கூறுதல்,
13. தலைவி பொறுத்துக் கொள்ளுதல், 14. தலைவன் பொருள் தேடச் சென்ற
இடத்துப் புலம்புதல், 15. தலைவன் திரும்பி வரும்போது தேர்ப்பாகனொடு
(பிரிவாற்றாமை) சொல்லி வருத்தப்படுதல், 16. மேகத்துடன் சொல்லுதல், 17.
வலம்புரிச் சங்கு ஒலி கேட்டுத் தலைவன் வருகின்றான் என்று கூறுதல், 18.
சங்கைத்தலைவி வாழ்த்துதல், 19. வந்த தலைவன் (தலைவியை) நினைத்தானா
என்று கேட்டல், 20. தலைவன் நினைத்தேன் என்று கூறுதல், 21. தலைவி
பொறுத்துக் கொண்டிருந்த தன்மையைக் கூறல் ஆக இருபத்தொரு கூறும்
வரைவிடை வைத்துப் பொருள் வயிற்பிரிவு என்பதன் கூற்றுப் பகுதிகளாம்.
ஆக மொத்தம் களவுக்குரிய கிளவி 293 ஆகும்.

     விளக்கம் : இது அகப்பொருள் 170.9 வரியிலிருந்து வந்த பகுதியைப்
பின்பற்றியது.

     பாட விளக்கம் : முன்னூரென்பர் (4வது வரி) என்ற மூலபாடம் முன்னூறு என்று திருத்தப்பட்டுள்ளது.