111. | போக்குஉணர்த்தல், நேராமை, நேர்வித்தல், நேர்தல், போக்கல்,விலக் குதல்,புகழ்,தேறு ஏற்றல்,எட்டு வகைத்தாய்த் தூக்குசகி இறைக்குஉடன்போக் குஉணர்த்தல் அவன் மறுத்தல், தோழிஉடன் படுத்தல்,உடன் படுத்தல் அவட்கு உணர்த்தல், ஏற்கும்நாண் அழிபுஇரங்கல் கற்புஉயர்ச்சி கூறல் இசைந்து,எழுதல், சுரத்துஇயல்பு சொல்,இறைவி மறுத்தல் ஆக்குறுகை யடைகொடுத்தல், வைகிருளில் விடுத்தல் அவன்சுரத்தின் உய்த்தல்அசைவு அறிந்திருத்தல் உடனே. [27] | இது உடன் போக்கின் வகையும் விரியும் உணர்த்துகின்றது. உரை: 1. தலைவியை உடன் அழைத்துச்செல்லும்படி தலைவனுக்குக் கூறுதல், 2. தலைவனும் தலைவியும் மறுத்தல், 3. இருவரையும் உடன்போக்கிற்கு ஒத்துக்கொள்ளும் படிச் செய்தல், 4. இருவரும் ஒத்துக்கொள்ளுதல், 5. இருவரும் செல்லவிடுதல், 6. தலைவியின் தளர்ச்சி கண்டு இருவரும் மேலும் போகாமல் கண்டோர் தடுத்தல், 7. தலைவன் தலைவியைப் புகழ்ந்து கூறுதல், 8. தலைவியைத் தேற்றுதல், ஆகிய எட்டு வகையினை உடையது உடன்போக்கு. 1 தோழி தலைமகனுக்கு உடன்போக்குக் கூறுதல், 2. அதற்குத் தலைவன் ஒத்துக்கொள்ளாது மறுத்தல், 3. தோழி தலைவனை ஒத்துக்கொள்ளச் செய்தல், 4. தலைவன் ஒத்துக்கொள்ளுதல், 5. தலைவன் ஒத்துக் கொண்டதைத் தலைவிக்குத் தோழி கூறுதல், 6. தலைவி நாணம் அழிந்து போவதற்கு இரங்குதல், 7. கற்பின் மேம்பாட்டைத் தோழி கூறுதல், 8. தலைவி ஒத்துக்கொண்டு புறப்படுதல், 9. தோழி பாலைவனத்தின் இயல்பைக் கூறுதல், 10. தலைமகள் மறுத்தல், 11. தோழி தலைவியைத் தலைவன் கையில் ஒப்படைத்தல், 12. விடியற் காலத்தில் தலைவனும் தலைவியும் செல்லுதல், 13. தலைமகளைத் |