சுவாமிநாதம்203பொருளதிகாரம்
 
தலைமகன் பாலைவனத்திற்கு அழைத்துச்செல்லுதல், 14. தலைமகள் இயலாமை
அறிந்து தங்குதல்.

     விளக்கம் : ‘உடன்படுத்தலுடன் படுத்தல் அவட் குணர்த்தல்............’
என்ற பாடமே காணப்படுகிறது. அடுத்த நூற்பாவில் மொத்தம் பத்தொன்பது
எனக்கூறப்படுவதாலும் உடன்படுத்தலும் தலைவன் போக்கு உடன்படுதலும்
பாங்கி தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தலும் என்ற மூன்றாகக்
காணப்படுவதாலும் உரையில் மூன்றாக விரித்து எழுதப்பட்டது. அல்லது
‘சுரத்து இயல்பு சொல் - தலைவி மறுத்தல்’ என்று இருப்பதைத் தோழி
சுரத்து இயல்பு கூறுதல் தலைவி மறுத்தல் என இரண்டாகவும் கொள்ளலாம்.

     இது அகப்பொருள் 181, 182:10 ஆகிய வரையுள்ள பகுதியின் தழுவல்.

112. உடன்கலந்துபூச் சூட்டிமகிழ்ந்து உரைத்தல்,அதைக் கண்டோர்
     அயிர்த்தல்,அவர் விலக்கல்,பதி அணிமை சொலல்,ஊர்
அடைந்தமைகூ றுதல்,பத்தொன் பானும்உடன்போக்காம்;
     அணிசெவிலி புலம்பல்,நற் றாய்புலம்பல், மனைமருட்சி,
இடுங்கண்டோர் மொழி,செவிலி பின்தேடிச் சேறல்,
     என்றுஐந்தாய்ச் செவிலிபாங்கி யைவினவல்;பாங்கி
மடந்தைபோக்குஉ ணர்த் தல்,தேற்றினர்க்கு எதிர்சொற்று
                                          அழுங்கல்.
வருசெவிலி அறிவின்மை சொலல்,தெய்வந் தொழலே.   [28]

உடன் போக்கின் விரியும் கற்பொடு கவ்வையும் விளக்குகிறது

     உரை: 15. உடன் கலந்து பூச்சூட்டி மகிழ்ந்து அளவளாவுதல், 16.
அதைப் பார்த்தவர்கள் ஐயம் அடைதல், 17. பார்த்தவர்கள் அவர்களை
விலக்குதல், 18. தலைவனுடைய ஊர் அருகில் இருப்பதைக் கூறல், 19.
தலைவன் ஊர் வந்து விட்டதைத் தலைவிக்குக் கூறுதல் ஆகப்
பத்தொன்பதும்