சுவாமிநாதம்207பொருளதிகாரம்
 
115. ஓதுபாங்கியர் நற்றாய்க்குஉணர் தல்நற்றாய்இறைவன்
     உளங்கொள்வே லனைவினவல், ஆறு(ம்)மீட் சியதாம்;
ஈதுரையுடன் சென்றுவரைத லாம்வினவல், இயம்பன்
     மேவுதல்,மூன் றாய்மன் னயர்வேட்கை யிற்றாய்
வாதிகலசெவி லியைவினவல், செவிலிக்கே பாங்கி
     வரைந்ததுஉணர்த் தல்செவிலி தாய்க்குஉணர்த்தல்
                                       இறையோன்
தாதியுடன் நுமர்க்கியான் வரைந்தமைகூறுஎன்றல்
     தான்முன்கூ றியதுஉணர்த்தல், ஐந்து(ம்)மீள் வரைவே. 
                                             [31]

மீட்சியின் ஒரு பகுதியும், மீள் வரைவும் உணர்த்துகின்றது

     உரை: 5. அது கேட்ட தோழியர் நற்றாய்க்கு உணர்த்துதல், 6.
தலைவனுடைய உள்ள (மன) நிலையை அறிந்து கொள்ள வேலனைக்
கேட்டல் என்ற ஆறும் மீட்சியின் விரியாகும். தலைவியுடன் போய் வரைந்து
மீண்டும் வருதலும் உரித்து. 1. நற்றாய் செவிலியை வினவுதல், 2. முன்னரே
திருமணம் நடந்தமை கூறுதல், 3. உறவினர்க்கு உரை என்று கூறுதல் என்ற
மூன்று வகையும் மீள்வரைவு என்பதின் பெரும் பிரிவாகும். 1. திருமணம்
செய்ய வேண்டும் என்ற விருப்பத்தோடு செவிலியைக் கேட்டல், 2.
செவிலிக்குத் திருமணம் நடந்து விட்டதைத் தோழி கூறுதல், 3. அதைச்
செவிலி நற்றாய்க்கு உணர்த்துதல், 4. தலைவன் தோழியிடம் உறவினர்க்கு
யான் திருமணம் செய்து கொண்டமையைக் கூறு என்று கூறுதல், 5. தோழி
முன்னரே அச்செய்தியைக் கூறி விட்டேன் என்று கூறுதல் என்ற ஐந்தும்
மீள் வரையின் விரியாகும்.

     விளக்கம் : இது நம்பியகப் பொருள் 191.6 முதல் உள்ள பகுதி 192,
193, 194 ஆம் சூத்திரங்கள் ஆகியவற்றை அடியொற்றியது. நம்பியகப்பொருள்
வினாதல், செப்பல், மேவல் என்ற மூன்றையும் அவற்றின் விரிவாய்ப் பின்னர்
கூறப்படுவதையும் தன் மனை வரைதல் (தனாதில் வரைதல்) என்று
குறிப்பிட்டுள்ளது.