சுவாமிநாதம்223புறத்திணை மரபு
 
போதல், 13. வீரர்களுடைய வழிவந்தோர் (உறவினர்) மகிழ்தல், 14.
பசுக்கூட்டங்களை ஊரில் கொண்டுவந்து நிறைத்தல், 15. பசு நிரையைப்
பங்கிட்டுக்கொள்ளுதல், 16. வீரர்கள் (மதுவை) உண்டு மனங்களித்து ஆடுதல்,
17. வேண்டியவர்களுக்குப் பசுக்களைக்கொடுத்தல், 18. பகைவர் நாட்டின்
நிலைமையைக் கூறினவர்க்குச் (அரசன்) சிறப்புச் செய்தல், 19. புள் நிமித்தம்
சொன்னவர்க்குப் பரிசு வழங்குதல், 20. துடிகொட்டினவனின் பண்பைக்
கூறுதல், 21. வெற்றியைத் தந்த கொற்றவைஎன்ற தெய்வத்தின் சிறப்புக்
கூறுதல், 22. பூசை செய்கிறவனோடு வள்ளிக்கூத்து (வெறி) ஆடுதல், என்ற
இருபத்திரண்டு பிரிவுகள் உள்ளன.

     1. பசுநிரை கவர்ந்து சென்றதை மீட்டல் கரந்தை, 2. ஆநிரைகளைக்
கொள்ளுதல், 3. அச்செய்தியைக்கேட்ட அரசன் வீரர்களை மீட்கச்
சொல்லுதல், 4. நிரை மீட்கும் படைகள் எழுப்பும் ஒலி, 5. போகும் வழியில்
புள்ளின் சகுனம் பார்த்தல், 6. பகைவர் போன வழியிடத்துச் செல்லுதல், 7.
புறத்துச்சென்று தங்குதல், 8. வீரன் போர் செய்த புண்ணோடு வருதல்.

     பாட விளக்கம் : ‘பறவாப்புடடெரிதல்’ (4வது வரி) என்ற மூலபாடம்
பறவாப்புட்டெரிதல்’ என்று திருத்தப்பட்டுள்ளது.

131. திடத்தபோர்க் களத்தொழிவு,அ ளெறிபிள்ளை, பிள்ளைத்
     தெளிவு,பிள்ளை யாட்டேகை யறவு,நெடு மொழியே,
அடுத்தபிள்ளைப் பெயர்ச்சி,வேத் தியல்மலிவு, குடிமை,
     ஆபெயர்த்தல், சமர் விலக்கல், நலிவிலாது உய்த்தல்
ஒடுக்குநண்ணு வழித்தோற்ற(ம்), நிறைத்த,லேபா தீடு,
     உண்டாட்டுக் கொடைதுடிகொற் றவைநிலையாம், எனவே
எடுத்தஇரு பத்தேழாம் இருவகைஏ ழேழும்
     இயம்பும்வெட் சித் திணைவிரிவென் றிடுவர்முல்லை
                                     நகையே    [3]