கொல்லிறையைப் புகழ்ந்துபிற நாடுஅழிபுக்குஇரங்கு கொற்றவள்ளை, பொருவீரர்க்கு அருள்பேராண் வஞ்சி வல்லதிறை வாங்கிஇறை பெயர்ந்தபக்கம், வேந்தின் வரிசைபெற்றோர் வண்மைசொன்மா ராயவஞ்சிப் பகுப்பே. [4] | இதுவும் அடுத்த சூத்திரமும் வஞ்சித் திணையை விளக்குவன. உரை: முல்லைத்திணைக்குப் புறமாக வருவது வஞ்சித் திணை. அது பகைவர் நாட்டின் மேற்சென்று போரிட்டு வெற்றி பெறக் கருதுவது. 1. அரசன் வஞ்சிப்பூவைச் சூடிக் கொள்ளுதல், 2. படைகள் எழுச்சியினால் ஏற்படும் அரவம், 3. அரசன் குடையைப் புறவீடு விடுதல், 4. அரசர் படையெடுத்துச் செல்லும் நாள் குறிப்பிடுதல், 5. கொற்றவைநிலை, 6. கொல்லர் போர்க்கருவிகளைச் செய்யும் தொழிலைக்கூறுதல், 7. அரசனைப்புகழ்ந்து அவனது தன்மையைக் கூறுதல், 8. பகைவர்களை அழிக்கும் அரசனைப் புகழ்ந்து பகைவர் நாடு அழிவதற்கு வருந்துகின்ற கொற்றவள்ளை, 9. போரிடுகின்ற வீரர்க்கு அருள் செய்கின்ற பேராண் வஞ்சி, 10. தோற்ற அரசனிடம் திறையைப்பெற்று அரசன் அந்நாட்டை விட்டு நீங்குவது, 11. பரிசுபெற்றோர் அரசனுடைய வள்ளல் தன்மையைச் சொல்லும் வீரர்களின் நிலையை (மாராய வஞ்சி). பாட விளக்கம் : வேல்உளவர் (2வது வரி) என்பது மூலபாடம். 133. | பகைஉரித்தந் திறஞ்சேர்நெடு மொழிவஞ்சி, முதற்போர் பகரமுதுசொல் வஞ்சிதெவ்வூர் எரித்தபுல வஞ்சி, திகழ்கொள்ளைப் புலவஞ்சி, பாணர்கொடை வஞ்சி திறைஈய்ந்த குடிக்கருள்செய் குறுவஞ்சி, கட்டூர் வகையுரைத்தல், தனிநிலையே, தழிஞ்சிபகை பணிந்து மன்னவன்ஊர் பெயராப்பா சறைவஞ்சி,பின்னும் இகலினர்நா டெரித்தபெரு வஞ்சிசோ றுதவல் இசைவஞ்சி, நாடழிபுக்கு இரங்கல்ஐயைந் ததுவே. [5] | |