கூறும் மறமுல்லை, 26. குடையைப்புகழும் முல்லை, 27. போரில் அவிப்பலி கொடுத்தல் (உயிரைப் பலியாகக் கொடுத்தல்), 28. சான்றோரின் பெருமையைக் கூறும் சால்பு முல்லை, 29. கிணையைக் கொட்டுவோரின் புகழைக் கூறுதல், 30. தத்துவத்தின்பயன் உணர்ந்து மெய்ப்பொருள் அறிதல், 31. உலகத்துத் துயரத்தை உணர்ந்து அருள் காரணமாகப்பற்றை ஒழித்தல் என்ற முப்பத்தொரு துறையும் வாகைத் திணைக்கு உரியது. விளக்கம் : புறப்பொருள் வெண்பாமாலை (சூத். 8) முப்பத்து மூன்று துறைகளைச்சொல்லியுள்ளது. 142. | பெருந்திணைக்குப் புறம்காஞ்சி, நில்லாத உலகம் பேணுதலாம்; இறையதிர்ஊன் றிடக்காங்சி சூடல், விரைந்து எதிர்த்தல் எதிர்த்தாரைத் தடுக்கும்வழித் தழிஞ்சி, மீளியர்க்குப் படைவழங்கல், வரிசையேற் றார்த்தன் முரண்புகறல், அறைகூவற் செல்கெனும்வாட் செலவு முனைக்குடையிற் சேரல்சூழ் உரைத்தல்பூக் கூறல் தருந்தூசி தாங்கிவீழ் தலைக்காஞ்சி, தலைதந் தார்க்குதவல் பதிதலைகண் டவள்உயிர்மாய்த் திடலே. [14] | இதுவும் அடுத்த சூத்திரமும் காஞ்சித்திணையின் விளக்கமும் அதன் துறைகளும் கூறுகின்றன. உரை : பெருந்திணைக்குப்புறமாக வருவது காஞ்சித்திணை 1. நிலைபேறு இல்லாத உலகத்தைப் போற்றிப் பாதுகாப்பது காஞ்சி, 2. பகையரசன் வந்துவிட அரசன் காஞ்சிப்பூவை அணிந்து கொள்ளுதல், 3. எதிர்த்துப் போரிட விரைவாகச் செல்லுதல், 4. எதிர்த்துவரும் பகையரசரைத் தடுத்து வரும் வழியைக்காத்தல், 5. வீரர்களுக்குப் படைக்கலங்களை வழங்குதல், 6. படைக்கலங் களையும் வரிசையையும் பெற்றுக்கொண்டோர் தங்களுடைய வலிமையைக் கூறுதல், 7. பகைவர் அறைகூவி அழைத்தால் செல்க என்று கூறும் வாள் செலவு, 8. போர்க்குடையைப் புறவீடு விடுத்தல், 9. இவ்வாறு செய்வேன் என்று சூளுரைத்தல், 10. அரசன் கொடுத்த |