சுவாமிநாதம்236புறத்திணை மரபு
 

     விளக்கம் : காஞ்சிக்குரிய துறைகள் இருபத்திரண்டு என்று
புறப்பொருள் வெண்பாமாலை (சூத். 4) கூறுகின்றது.

144. கைக்கிளைக்குப் புறம்பாடாண் டிணைபாடிற் குரிய
     காவலனைப் பாடொழுக்கம் பாடுநெறித் தாகு(ம்);
மெய்க்கொடைசீர், ஆற்றல்,அளி சொல்லிறைக்கு வாயில்
     விடும்புலவன் கடைநிலைஈ சனைப்பிறரைப் பிறிதைத்
தக்கொருவ னோடுஒன்றோடு உவமஉரு பகமாச்
     சாற்றல்இறை முன்எண்ணும் பரிசில்இவை என்றல்,
தொக்கின்னர் இவைஈய்ந்தார் அவர்போல்ஈ கென்றல்,
     துயில்எழுப்பல், மடலேறல், மங்கலம்பா டுதலே.   [16]

இதுவும் அடுத்த சூத்திரமும் பாடாண் திணையின் விளக்கமும் அதன்
துறையும் கூறுகின்றது.

     உரை : கைக்கிளைக்குப் புறமாக வருவது பாடாண் திணை. பாடுதற்கு
உரிய அரசனைப் பாடும் சிறப்புப் பண்புகளை உடையது அது: 1. அரசனின்
கொடைத் திறன், ஆற்றல்திறன், முதலியவற்றைச் சொல்லிப் புலவன் வாயில்
காவலனை அனுப்புதல், 2. இறைவனொடு வேறொரு தக்கவரையும்
தக்கபொருளையும் உவமையாகவும் உருவகமாகவும் ஒப்பிட்டுக் கூறல், 3.
அரசன் முன்னால் தான் பெறக் கருதும் பரிசில் இவை என்று கூறுதல், 4.
இன்னார் இவை ஈந்தார், அவர்போல நீயும் தருக என்று கூறுதல், 5.
அரசனைத் துயிலிலிருந்து எழுப்புதல், 6. மடல் ஏறுதல், 7. மங்கலம் பாடுதல்.

145. பாடுசபை மங்கலமே, விளக்குநிலை, சுடரைப்
     பண்புவமை சொலல்,கபிலை நிலைவேள்வி நிலையே,
வீடுவெள்ளி நிலைமுதலா மழைக்குறி,யில் வாழ்க்கை
வேந்தன்அர சிருப்புமணச் சிறப்பு,மகப் பயத்தல்;
     நாடு,நகர், மலைநதி‘தார், கொடி,வளஞ்சொல் துறைகள்;
நாட்சிறப்புக் கிணைநிலை,பாண் கொடை,மறக்கள வழியே, ஆடும்வெறி, ஆயுதமங் கலம்,கடவுள் வணக்கம்,
     அடுத்தகட வுளைவணங்கிப் பயன்கூறும் கூற்றே.   [17]

     உரை : 8. சபையில் மங்கலம் பாடுதல், 9. அரசனுடைய விளக்கின்
சிறப்பைக் கூறுதல், 10. ஞாயிற்றின்