பண்போடு உவமித்துச் சொல்லுதல், 11. கபிலைப் பசுவின் முறைமையைக் கூறல், 12. வேள்வி செய்த முறைமையைக் கூறுதல், 13. வெள்ளியினது நிலைமையைக் கூறுதல், 14. மழைக்குறி கூறுதல், 15. இல்வாழ்க்கையின் சிறப்புக் கூறுதல், 16. வேந்தன் அரசிருப்பு, 17. திருமண வாழ்க்கையின் சிறப்புச்சொல்லுதல், 18. மகப்பேற்றின் சிறப்புச்சொல்லுதல், 19. நாட்டின் வளம் சொல்லுதல், 20. நகரின் வளம் சொல்லுதல், 21. மலையின் வளம் சொல்லுதல், 22. ஆற்றின் வளம்சொல்லுதல், 23. தாரின் சிறப்புச் சொல்லுதல், 24. கொடியின் சிறப்புச்சொல்லுதல், 25. நாட்சிறப்பு, 26. கிணைகொட்டுவோனின் நிலையைக்கூறுதல், 27. பாணர்க்குக்கொடுத்தல், 28. போர்க்களத்தின் சிறப்பு, 29. ஆடும் வெறி, 30. ஆயுதத்தின் நன்மையைக்கூறுதல், 31. கடவுளை வணங்குதல், 32. கடவுளை வணங்கிப்பெறும் பயன் சொல்லுதல். 146. | கூத்தர்விற லியர்பொருநர், பாணரே, புலவர் கூறுமாற்றுப் படைகள்; செவி யறிவே யுறுத்தல், வேத்தவையில் கொடைபெற்றும் விடைபெறா திருத்தல் விடைச்செலவு, கடவுள்மின்னார் விரும்பல் நயத்தல், ஏத்துதார்விரும் பல்புல்லேம் எனல்வேண்டா விருப்பே, இறைமயலைச் செயக்குரைத்தல், புறநிலைவா யுறையின் வாழ்த்துக்கள்ஓம் படைநிலைஎண் ணாம்இவ் வேழின் வரும்பொதுச்சொல் லாதனவு(ம்) ஒழிபெனஉன் னுகவே [18] | இதுவும் பாடாண் திணைக்குரிய துறையை விளக்குகிறது. உரை : 33. கூத்தர் ஆற்றுப்படை, 34. விறலியர் ஆற்றுப்படை 35. பொருநர் ஆற்றுப்படை 36. புலவர் ஆற்றுப்படை 37. பாணர் ஆற்றுப்படை, 38. அரசன் நல்லனவற்றை அறிந்து கொள்ளக்கூறுதல், 39. அரசவையில் பரிசில் பெற்றும் விடை பெற்றுச்செல்லாது தங்கியிருத்தல், 40. விடைபெற்றுச் செல்லுதல், 41. கடவுளைப் பெண்கள் |