உரை : 23. துன்பம் உற்றவர்கள் அழும் கையறு நிலை (செயலற்ற நிலை), 24. போர்க்களத்தில் இறந்தவர்க்கு வருத்தப்படுதல், 25. இறந்தவனுடைய புகழை விரும்பிப்பாராட்டி உரைத்தல், 26. குற்றமற்ற அறம் முதலியவற்றைச் சொல்லும் முதுமொழி, 27. இறப்பதற்குமுன் அறம் செய்யுங்கள் என்று கூறுதல், 28. நிலையாமை, 29. அரசனை இழந்த பெண் நாணையே துணையாகக் கொள்ளுதல், 30. கற்பையே காப்பாகக் கொள்ளுதல், 31. கற்பு முல்லை, 32. மணந்தவன் வருத்தம் நீங்கின மனத்துடனேயே விதியை ஏத்தும் பாண் முல்லை. 33. இல்லின் சிறப்பைக் கூறும் இல்லாண் முல்லை, 34. காடு வாழ்த்து, 35. பொருள் கொடுப்போரைத் துதித்தல், 36. பொருள் கொடுக்காதவரைப் பழித்தல், 37. உந்தி, 38. கடை திறப்பு, 39. இடைமை, 40. வலைமை, 41. குறம், 42. தவம். 150. | தவரில் உறுப் பியல்கள்சொல்லல், சித்துஉரைத்தல், மல்லன், தகர்விடைபூம் ஆனை,பரி கோழி,சுவர்ப் பூவை, சிவல்,கிளி,தேர், கவி,சூது, யாழ்,பாடல், ஆடற், சிறப்பு; உலாச், சுடர்தோற்றம், தூது,தொழில், சிறப்பு, நவில்கால, முடிகவித்தல், அமைச்சியல், பூக் கொய்தல், நன்னீரா டுதல், பொழிலா டுதல்,சுண்ணம் இடித்தல், செவியதோணோக் கம்ஆடு தல்,குயில்கூ வித்தல் தெள்ளேணங் கொண்டாடல், வாகனத்தின் திறமே [22] | உரை : 43. உறுப்புக்களின் இயல்பைக் கூறுதல், 44. சித்து உரைத்தல், 45. மல்லன், 46. தகர், 47. விடை, 48. பூழ், 49. யானை, 50. பரி (குதிரை) 51. கோழி, 52. சுவர்ப்பூவை, 53. சிவல், 54. கிளி, 55. தேர், 56. கவி, 57. சூது, 58. யாழ், 59. பாடல், 60. ஆடல், 61. சிறப்பு, 62. திங்களின் தோற்றம், 63. ஞாயிற்றின் தோற்றம், 64. தூது, 65. தொழிற்சிறப்பு, 66. காலம், 67. முடி சிறப்பு, 68. அமைச்சியல், 69. பூப்பறித்தல், 70. நீராடுதல், 71. பொழில் ஆடுதல், 72. சுண்ணம் |