சுவாமிநாதம்243
 

5. யாப்பதிகாரம்

1. உறுப்பு மரபு

152. எழுத்துமுதல் இரண்டு,சார்பு ஈரைந்தாய், ஈராறு
     என்பர்அசை இரண்டு,முப்பான் சீர்,தளைஏழ், அடிஐந்து,
ஒழுக்கின்ஐம் பான்,ஒன்றுதொடை ஒன்பான்ஆறுஒன்பான்
     உடன்இரண்டாய் விரி,நாற்பா மூன்று இனம்யாப்
                                          பியலாம்,
அழுத்துகுறி(ல்), நெடில்,தனித்தும், அவற்றினில்ஒற் றடுத்தும்,
     ஆய்தநே ரசைநான்கு குறிலிணைந்து நின்றுங்,
கொழுத்தகுறி னெடில்தனித்தும், அவற்றினில்ஒற் றடுத்தும்
     கூடுநிரை யசைநான்கொடு எட்டாம்ஈ ரசையே.     [1]

யாப்புக்களின் உறுப்பும் அசையும் உணர்த்துகின்றது.

     உரை : முதல் எழுத்து இரண்டு வகை (உயிர், மெய்); சார்பெழுத்து
பத்து (குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை,
ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்,
குற்றியலுகரக் குறுக்கம்) ஆக எழுத்து பன்னிரண்டு. அசை இரண்டு வகை