156. | அருள்பாவில் வெள்ளைசெப்பல், அளவுபின்சிந்து இறும்ஓர் அசைஇரண்டேல் உவ்வாம்,ஈ ரடிகுறட்பாக் கூன்சேர் இருகுறள்நே ரிசைஆசிட் டாசிடைநே ரிசைகூனில் அதாசிட்டுஇரு குறள்ஆசிடை விகற்புஒன்று இரண்டாம் ஒருமைபன்மை விகற்பாய்க்கூ னிலவுநே ரிசையின் ஒழிந்தவும்இன் னிசை,அடிமூன்று இன்னிசைநே ரிசைபோற் பரவுதல்சிந் தியல்,ஐந்து முதல்ஈராறு அளவும் பஃறொடை,மிக்கு ஆதல்கலி யொன்பதும்வெண் பாவே. [1] | வெண்பாவின் வகை உணர்த்துகின்றது. உரை : வெண்பா செப்பல் ஓசை உடையது. நான்கு சீர் கொண்ட அடிகளையுடையது. இறுதி அடி மூன்று சீராய் வரும். ஈற்றுச்சீர் ஓரசையையுடையது. இரண்டு அசையானால் (காசு, பிறப்பு என்னும்) உகரவாய்பாட்டில் முடியும். இரண்டு அடியால் வருவது குறள்வெண்பா. இரண்டு குறள் வெண்பாவாய் நடுவே தனிச்சொல் பெற்று வருவது இரு குறள் நேரிசை- வெண்பா, ஆசு இடையே வைத்து இரண்டு குறள் வெண்பாவாய் நடுவே தனிச்சொல் வைத்து ஒரு விகற்பத்தாலும் இரண்டு விகற்பத்தாலும் வருவது ஆசிடை நேரிசை வெண்பா. ஒரு விகற்பத்தாலும் பல விகற்பத்தாலும் |