மூன்று அடிகள் தம்முள் அளவு ஒத்து வருமாயின் அகவல் தாழிசை. எல்லா அடிகளும் ஒத்து வந்து ஈற்றயல் அடி குறைந்து நான்கு அடியாய் வருவதும் இடையிலுள்ள அடி குறைந்து நான்கு அடியாய் வருவதும் இடை குறைந்து வருவதும் இடைகுறைந்து மடக்காய் வருவதும் எல்லாம் அகவல் துறையாம். கழிநெடில் அடி நான்காய்த் தம்முள் அளவு ஒத்து முடிந்தால் ஆசிரியவிருத்தம். விளக்கம் : நான்கடியே (4-வது வரி) இடைநிலை விளக்காய் நின்றது. 159. | கலிப்பாநே ரடிதுள்ளல், இருசுரித கம்பின் காட்டும்ஒரு தரவு முத்தா ழிசைகூன்பின் னிலைகொண்டு ஒலித்தல்நே ரிசைஒத்தா ழிசை;இடை தேர் குறள் சிந்து ஓய்ந்து ஓய்ந்துஉற் றிடில்அம்போ தரங்கவொத்தா ழிசை; முன் பலித்துஅராகம் பெறில்வண் ணகவொத்தா ழிசையாம் பண்பின்வெண் பாகசிதைந்து முச்சீர்இறு வதுவெண்க லிப்பா வலித்தரவும் தரவிணையும் சிலபலதா ழிசையு(ம்) மயங்கலுங்கொச் சகம்ஒன்பான் பிறங்கலிப்பா அளவே [4] | கலிப்பாவின் வகை உணர்த்துகின்றது. உரை : கலிப்பாவுக்கு நேரடி (நான்கு அடி); துள்ளல் ஓசை உரியது. சுரிதகம் பின்னே வந்து முடியும். ஒரு தரவு வந்து அதன்பின் மூன்று தாழிசை வந்து அதன்பின் ஒரு தனிச்சொல் வந்து ஒரு சுரிதக உறுப்புப் பெற்று வருவது 1. நேரிசை ஒத்தாழிசைக்கலிப்பா. தாழிசைக்கும் தனிச்சொற்கும் நடுவே நான்குசீர் அடியும் மூன்றுசீர் அடியும் இரண்டு சீர் அடியும் கொடுத்துத்தரவு, தாழிசை, அம்போ தரங்கம், தனிச்சொல், சுரிதகம் பெற்று வருவது 2. அம்போதரங்க ஒத்தாழிசைக்கலிப்பா, அம்போதரங்க உறுப்புக்கும் தாழிசைக்கும் நடுவே அராகம் என்ற உறுப்பு வந்தால் |