சுவாமிநாதம்257யாப்பதிகாரம்
 
செய்திகளும் பொருத்தமாக அமையும் முறையில் படலம் முதலிய
பாகுபாட்டோடு பல சுவைகளும் பாவங்களும் பொருந்தும்படிப் பாடுவது.

     விளக்கம் : இது தண்டியலங்காரம் 7, 8, ஆகிய சூத்திரங்களை
ஒட்டியது.

164. சொன்னவற்றிற் குறையினுமாம், அறம்ஆதி நான்காய்ச்
     சொலும்பயனிற் குறைதல்,சிறு காப்பியமாம்; அவைதாம்
உன்னும்ஒரு வகைப்பாட்டிற் பலவகையாம்; பாட்டின்
     உரைபாடை தழுவலுமாம்; இவ்விருசெய் யுளிலே
மன்னுவது பிரபந்தம் அளவிலவாம்; இவையே
     மலை,நதி, நாடு, ஊர்,தார்,மாக் களிறு,கொடி, முரசம்
பன்னுசெங்கோல், எனுந்தசாங்கம் பொருந்திப்பொ ருத்தம்
     பார்த்துப்பா கத்தொடுசொல் வனசிலசொல் லுவமே.   [3]

காப்பியத்தின் சிறப்பு இலக்கணம் பிரபந்த வகைகளும்
உணர்த்துகின்றது.

     உரை : மேலே சொல்லப்பட்ட உறுப்புக்களில் சில குறைந்தாலும்
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பொருளில் குறைந்துவருவது
சிறுகாப்பியம் எனப்படும். இரண்டு வகைக்காப்பியங்களும் ஒருவகைச்
செய்யுளாலும் பலவகைச் செய்யுளாலும் இயற்றப்பட்டு உரைநடை விரவியும்
பிறமொழிச் சொல் கலந்தும் வரும். இவற்றில் கணக்கற்ற பிரபந்தங்களும்
கலந்துவரும். மலை, நதி, நாடு, ஊர், மாலை, குதிரை, யானை, கொடி, முரசு,
செங்கோல் ஆகிய பத்தும் (தசாங்கம்) சேர்த்துப் ‘பொருத்தம்’ பார்த்துப்
பாகமும் சொல்லவேண்டும். அவற்றுள் சில பின்னால் கூறப்படுகின்றன.

     விளக்கம் : இது தண்டியலங்காரம் 9, 11 ஆகிய இரண்டு
சூத்திரங்களையும் வெண்பாப்பாட்டியல் 19ஆம் சூத்திரத்தையும் தழுவியது.
செய்யுள் நெறி (வைதருப்பம், கௌடம்) எனத் தண்டியலங்காரம் கூறுவதையே
இவர் ‘பாகம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.