சுவாமிநாதம்258யாப்பதிகாரம்
 
165. வன்பில்பிள்ளைக் கவிஅகத்திற் கோவைபுறக் கோவை
     வருக்கத்திற் கோவைஉலா வொடுபவனிக் காதல்
இன்பமடல், வளமடலே அனுராக மாலை
     இசைவிரக மாலைஉலா மடல்சதகம் பதிகம்
அன்புஇரட்டை மணிமும்மணி நான்மணியிற் கோவை
     அந்தாதி, மாலைஅலங் காரபஞ்ச மந்தான்
முன்புவெண்பாக் கலித்துறையே விருத்தத்தந் தாதி
     மொழிபதிற்றுப் பத்தாம்அந் தாதிகலம் பகமே.  [4]

பிரபந்தங்களின் வகை உணர்த்துகின்றது.

     உரை : பிள்ளைக்கவி, (பிள்ளைத்தமிழ்) அகக்கோவை, புறக்கோவை,
வருக்கக்கோவை, உலா, பவனிக்காதல், இன்ப மடல், வளமடல், அனுராக
மாலை, விரகமாலை, உலாமடல், சதகம், பதிகம், இரட்டை மணிக்கோவை,
மும்மணிக்கோவை நான்மணிக்கோவை, மாலை, அலங்காரபஞ்சமம், வெண்பா,
கலித்துறை, விருத்தத்தந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலம்பகம் ஆகியனவும்

166. கலந்திடுபன் மணிமாலை, பரணி,திக்கு விசயங்,
     காதல்வண்ணம், பஞ்சரத்தின நவரத்தின மேசல்
இலங்குகுற(ம்) மறம்பள்ளு நாடகங்கள் பிறவும்
     ஏற்றுபிர பந்தமதாம்; இவைஅலது புலவோர்
துலங்குமதி யூகத்தாம் அகம்புறமாம் பொருளின்
     துறையின்ஒன்று பலபலபாட் டோர்பாட்டின் இசைப்பார்
வலன்கலியே பாலைமுல்லை காஞ்சிவஞ்சி கடிக
     மாலைவிலா சந்தூது மஞ்சரிப்பேர் மொழியே.  [5]

பிரபந்த வகையின் தொடர்ச்சி இது.

     உரை : பன்மணிமாலை, பரணி திக்குவிசையம், காதல், வண்ணம்,
பஞ்சரத்தினம், நவரத்தினம், ஏசல், குறம், மறம், பள்ளு, நாடகம் ஆகியனவும்
இவை போன்ற பிறவும் பிரபந்த வகையைச் சாரும். இவை அல்லாமல்,
புலவர்கள் தங்களின் அறிவுத்திறத்தால் அகப்பொருளிலும் புறப்பொருளிலும்
உள்ள