வருமாயின் நன்மை எனவும் பின்னிரண்டு தானங்களாகிய மூப்பு, மரணம் என்பவற்றுள் ஒன்றாய் வருமாயின் தீது என்றும் கொள்ளவேண்டும். இது தானப்பொருத்தம் ஆகும். குற்றெழுத்தெல்லாம் ஆண்பால் எழுத்தாம். நெட்டெழுத்தெல்லாம் பெண்பால் எழுத்தாம். எனவே ஆணைப் புகழுமிடத்து ஆண்பால் எழுத்தும் பெண்ணைப்புகழுமிடத்து பெண்பால் எழுத்தும் சிறப்புடைத்து. இரண்டு எழுத்துக்களும் மயங்கி வந்தாலும் குற்றமில்லை. இது பால் பொருத்தம் ஆகும். விளக்கம் : இது வெண்பாப்பாட்டியல் முதன் மொழியியல் 4, 5, 6, 7 ஆம் சூத்திரங்களைத் தழுவியது. பாட விளக்கம் : ‘வகையுழி’ (1-வது வரி) என்பதன் சரியான பாடம் ‘வகையுளி’ என்பதே ‘நெடிற்பின்’ என்ற மூலபாடம் (4-வது வரி) ‘நெடிற்பெண்’ என்று திருத்திக் கொள்ளப்பட்டுள்ளது. 175. | அறி,ஐஒ,ஒள, ஓவல்உயிர், கச,த,ந,ப, ம,வவேழ அமுதம்;அம் முதல்அவுங்கான் மாத்திரைஅக் கேனஞ் செறிஅளபு நஞ்சு;ஞ,ண, வெற்றுஆய்தம் அமுதில் சேர்த்திடார்உயிர் சிவன்,மெய்ய யன்மால் செவ் வேள், விண் ணிறை,கதிர்இந் திரன்,வருணன், நிதிக்கோன்,ஈர் இரண்டாய் இயற்றினராம்;உயிர், கமுதல் ஆறு,ஐயர் முதல் உறும்,அரசர் உறுல,வ றனவசியர் பிறவே; உழவரையர்அரக்கையர்தாழ்ந் ததற்குஉயர்வு மாமே [14] | உணவு, வருணம் என்ற இரு பொருத்தமும் விளக்குகின்றது. உரை : ஐ, ஒள, ஒ ஆகியவை அல்லாத உயிரெழுத்துக்களும், க, ச, த, ந, ப, ம, வ ஆகிய ஏழு மெய்யெழுத்துக்களும் உணவாகிய அமுத எழுத்தாகவும் முதல் எழுத்துக்களாக வராதனவும் கால் மாத்திரை உடை மகரக்குறுக்கம், |