ஆய்தக்குறுக்கம் முதலியனவும் ஆய்தமும் அளபெடைகளும் நஞ்சு எழுத்தாகவும் கருதப்படும். ஞ, ண ஆகிய இரண்டு மெய்யெழுத்தையும் ஆய்தத்தையும் அமுத எழுத்தோடு கலந்து சொல்லமாட்டார். இது உணவுப் பொருத்தமாகும். உயிர் எழுத்துக்கள் அனைத்தும் சிவன், வருணம், மெய்யெழுத்துக்கள் ஒன்பதாய் வகுத்து அயன், திருமால், முருகன், இந்திரன், கதிரவன், மதி, எமன், வருணன் குபேரன் ஆகியோர்க்கு உரியதாகக் கருதப்படும். உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் க, ங, ச, ஞ, ட, ண ஆகிய ஆறு எழுத்துக்களும் அந்தணர்க்கும். த, ந, ப, ம, ய, ர, ஆகிய ஆறு மெய்யும் அரசர்க்கும் ல, வ, ற, ன, ஆகிய நான்கும் வணிகர்க்கும் ழ, ள என்ற இரண்டும் உழவர்க்கும் உரியன. அந்தணர்க்கு உரிய எழுத்து அந்தணர்க்கு மட்டுமாகவும் உயர்ந்தோர்க்கு உரிய ஏனைய எழுத்துக்களைத் தாழ்ந்தோர்க்கும் பயன்படுத்தலாம். இது வருணப் பொருத்தமாகும். விளக்கம் : இது வெண்பாப்பாட்டியல் முதன்மொழியியல் 6, 7 ஆகிய சூத்திரங்களைத் தழுவியது. பாட விளக்கம் : ‘முதலுறு மரசாரறு லள ..’ (இறுதி வரி) ‘முதல் உறும் அரசர் உறுலள’ என்று திருத்திக் கொள்ளப்பட்டுள்ளது. 176. | ஆமுதன்மை உற்பவநாட், பேர்நாண மத்திமம், ஆம் அவைமூ வொன்பான்ஆக் கி,ஒன்றுமூன் றைந்தேழ் தாமும்எட்டாம் இராசிவைநா சியமுமா காவாம்; சாரும்இரு தலைபொருந்தில் உத்தமோத் தமமாம் ஏமவலி குறில்ஈறில் சுரகதியா, வீ,யூ,வே, இறின்மெலியு நரகதிமு தற் சீர்க்கு இசைவாம் காயமிருக கதிய,ர,ல,ள, றபிறவே நரக கதியாகா; இவற்றுயிர்முன் மெய்யொடில் குறுமே. [15] | இது கதி உணர்த்துகின்றது. |