179. | தன்மை,சுவை, உவமை,வேற் றுமை,வேற்றுப் பொருளே தற்குறிப்பு, நிதெரிசனம், உருபகம்,ஒட்டு, ஏது முன்னவிலக்கு, அவநுதி,உதாத்தம்,நிர னிறையே, முரண்,மாறு படுபுகழ்,இ லேசம்,தீ பகமே, பின்னிலை,சி லேடை,புணர் நிலை,சமா யுதமே பெறுவிபாவ னைதம்மேம் பாடு,பரி யாயம், அன்னபரி வருத்தனை,வி சேட(ம்),நுட்பம், வாழ்த்தோடு அதிசயம்,முப் பதுஞ்சங்கீ ரணமும்யாப் பணியே. [1] | இது பொருளணிகளின் தொகை உணர்த்துகின்றது. உரை : 1. தன்மை, 2. சுவை, 3. உவமை, 4. வேற்றுமை, 5. வேற்றுப்பொருள் வைப்பு, 6. தற்குறிப்பு, 7. நிதரிசனம், 8. உருவகம், 9. ஒட்டு, 10. ஏது, 11. முன்னவிலக்கு, 12. அவநுதி, 13. உதாத்தம், 14. நிரனிறை, 15. முரண், 16. மாறுபடுபுகழ், 17. இலேசம், 18. தீவகம், 19. பின்னிலை, 20. சிலேடை, 21. புணர்நிலை, 22. சமாயுதம், 23. விபாவனை, 24. தம்மேம்பாட்டு உரை, 25. பரியாயம், 26. பரிவருத்தனை, 27. விசேடம், |