சுவாமிநாதம்278அணியதிகாரம்
 
186. கூறுஉவமை உவமேயம் வேற்றுமைநீத்து ஒன்றாய்க்
     கொண்டுஆக்கந்; தொகை,விரியாம் உருபகம்தான், இயைபு
தேரியைபு இலாமைஉரு பகம்சமா தானம்,
     சிறப்பு,விருத் தம்,முற்றோடு, அவையவங்கள் அவை
                                           யவியாம்,
ஏறுபல; உருபகத்தோர் தொடாஇயைபு தொடர் இன்
     றியையாமை உருபகம்முன் உருபகம்செய் ததைப்பின்
வேறுஉருபித் திடில்பொருட்கே உருபகப்பண் பின்மை
     வேறுகாரணம் இயல்புஎன்றெ னல்சமாதா னமதே     [8]

உருவக அணியை விளக்குகின்றது.

     உரை : உவமையாகக் கூறும் பொருளுக்கும், உவமித்துக் கூறப்படும்
பொருளுக்கும் வேற்றுமையை நீக்கிவிட்டு ஒன்று என்பதோர் உணர்வுதோன்ற
அமைப்பது உருவக அணி. 1. தொகை உருவகம் (ஆகிய என்ற சொல்
மறைந்து இருக்கும்படிக் கூறுவது), 2. விரி உருவகம் (அச் சொல்லைப்
பயன்படுத்திக் கூறுவது), 3. இயைபு உருவகம், 4. இயைபிலா உருவகம், 5.
இயைபு இலாமை உருவகம், 6. சமாதான உருவகம், 7. சிறப்பு உருவகம், 8.
விரூபக அல்லது விருத்த உருவகம், 9. முற்று உருவகம், 10. அவையவ
உருவகம், 11. அவையவி உருவகம் எனப் பலவகைப்படும்.

     பல பொருள்களை உருவகம் செய்யும்போது தம்முள் இயைபு
உடையவாகக் கூறி உருவகம் செய்வது இயைபு உருவகம். பல பொருளும்
தம்முள் இயையாமை இயைபிலா உருவகம். ஒரு பொருளை நன்றாக
உருவகம் செய்த பின்னர் அதனை வேறாக உருவகம் செய்து
அப்பொருளுக்கு உருவகப் பண்பு இல்லை என்று வேறு காரண இயல்பு
என்று கூறுதல் சமாதான (சமாதானம்) உருவகம்.

     விளக்கம் : அடுத்த சூத்திரத்தில் விருத்தம் என்பது விரூபகம்
என்று கூறப்பட்டிருப்பதும் தண்டியலங்காரத்தில் விரூபகம் என்றே
கூறப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கன.