சுவாமிநாதம்28எழுத்ததிகாரம்
20. ஒற்றுயி ராதிகள் பாத்தாறுறுப்புக் கூட்டாம்
    ஊழ்மைத்த வடிவு எகர வொகர மெய் புள்ளியுமாம்;
அற்ற நெடில் இரண்டு குறுகு ஐ ஒள முதல் ஈறு
    ஒன்றரை இடையொன்றாம்; குறில் ஒன்று ஆய்த[ம்] மெய்
 

குற்றுகரங்

 
  குற்றிகரம் அரை மவ் வாய்தக்குறுக்கமுங் கால்;
    குறித்து உணரிற் கண்ணிமைத்த நொடித்தன் மாத்திரைதான்;
மற்றவிசை விளி பண்டமாற்று [உ]றைமீட்டு
    னாவலும் புலம்புங் குறிப்பு இசையும் வரைவில வந்திடுமே.
 

[8]

 

இது வரிவடிவமும், மாத்திரையும் கூறுகின்றது.

உரை : எகர ஒகரம் அவற்றின் இணையான நெட்டெழுத்தில் புள்ளி
பெற்றுக் குறிலாகும். மெய்யெழுத்தும் புள்ளிபெறும். நெட்டெழுத்து இரண்டு
மாத்திரை பெறும். ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் மொழி முதலிலும்
இறுதியிலும் ஒன்றரை மாத்திரையும் மொழியிடையில் ஒரு மாத்திரையும்
பெறும். குற்றெழுத்து ஒரு மாத்திரையும், ஆய்தம், மெய், குற்றியலிகரம்,
குற்றியலுகரம் முதலியன ஒவ்வொன்றும் அரை மாத்திரையும் மகரக்
குறுக்கமும், ஆய்தக் குறுக்கமும் ஒவ்வொன்றும் கால் மாத்திரையும் பெறும்.
கண்ணிமை அளவும் கைநொடி அளவும் ஒரு மாத்திரைக்குரிய அளவு
கோலாம். இசைக்கும் போதும், விளிக்கும் போதும், பண்டமாற்றின் போதும்,
அலறும் போதும், புலம்பும் போதும், மகிழ்ச்சியின் போதும் மேலே
குறிப்பிடப்பட்ட வரையறை இன்றி மாத்திரை மிகுந்து வரும்.

விளக்கம் : பழங்காலத்தில் இன்று எ, ஒ என்று குற்றெழுத்துக்களாகக்
கருதப்படும் எழுத்துக்கள் நெட்டெழுத்துக்களாகக் கருதப்பட்டு அதன்மேல்
ஒரு புள்ளி வைப்பதன் மூலம் குற்றெழுத்து அமைத்துக்கொள்ளப்பட்டிருக்க
வேண்டும். இன்றைய எழுத்துமுறை (நெட்டெழுத்திற்கு அடியில் ஒரு
வளைவுகோடு இடுவது) வீரமாமுனிவர் ஏற்படுத்தியதாகக் கூறும் கருத்து
சரியானதன்று என்று மயிலை சீனி வேங்கடசாமி கிறித்துவமும் தமிழும்
என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.