சுவாமிநாதம்280அணியதிகாரம்
 

     விளக்கம் : ஒட்டணியின் விளக்கம் தண்டியலங்காரம் 52, 53-ஆம்
சூத்திரங்களைத் தழுவியது. தண்டி நான்கு வகையினை உடையது ஒட்டணி
என்று விதந்து கூறுகிறது.

188. ஆம்இதனால் இதுவிழைந்தது எனும்ஏது, அதுதான்
     அகம்புறம்ஒற் றுமைக்கருவி யாம்,யுத்தம், அயுத்தம்,
தோமில்கா ரியம்தெரிகா ரணம்,ஓர்பால் தோற்றம்,
     தூரகாரி யமும்;ஒன்றின் ஒன்றுஉண்மை, இன்மை,
தாம்அழிவு படல்என்றும், எனும்ஐந்து அபாவந்
     தாமும்அது வாம்;குறிப்பின் மறுக்கின்முன்ன விலக்காம்;
காமர்முக் காலமும்,மேவு பொருள்,குணம்,கா ரியமே
     காரணத்தால், வன்சொல்,வாழ்த்து, ஆதியின்வந் திடுமே. 
                                               [10]

ஏது, முன்னவிலக்கு ஆகிய இரண்டையும் விளக்குகின்றது.

     உரை : இந்தக் காரணத்தினால் இந்தக் காரியம் விளைந்தது என்று
கூறுவது ஏதுஅணி. காரணத்திற்கேற்ற காரியம் நிகழ்வதாகக் கூறுவது யுத்த
ஏது அணி. காரணத்திற்குப் பொருந்தாத காரியம் நிகழ்வதாகக் கூறுவது
அயுத்த ஏது அணி. காரியத்தைத் தெரிந்துகொள்ளும் படியான காரணத்தைக்
கூறும் காரியம் தெரிகாரண ஏது அணி. காரணமும் காரியமும் ஒருங்கே
நிகழ்வதாகக் கூறுவது ஓர்பால் தோற்ற ஏதுஅணி. ஒரு வழிக் காரணம்
நிகழப் பிறிதொரு வழிக்காரியம் நிகழ்வதாகக் கூறுவது தூரகாரிய ஏது அணி.

     1. ஒன்றின்கண் ஒன்று இல்லாமையைக் கூறும் ஒன்றின் ஒன்றது
அபாவம், 2. ஓரிடத்தில் ஒரு காலத்தில் உள்ளபொருள் பிறிதோரிடத்தும்
பிறிதொருகாலத்தும் இல்லாமையைக் கூறும் உண்மை அபாவம், 3.
இல்லாமையினது இல்லாமையைக் கூறும் இன்மையது அபாவம், 4. முன்பு
உள்ளது அழிவுபட்டு இலதாதலைக் கூறும் அழிவுபட்ட அபாவம், 5.
எக்காலத்தும் இல்லாமையைக்