கூறும் என்றும் அபாவம் என்ற ஐந்துவகை அபாவ அணியும் ஏதுவின் கண் அடங்கும். முன்னவிலக்கு அணி, இறப்பு, எதிர்வு, நிகழ்வு என்னும் மூன்றுவகைப்பட்ட காலங்களோடும் பொருந்திவரும். பொருள் விலக்கு, குண விலக்கு, காரிய விலக்கு, காரண விலக்கு, வன்சொல் விலக்கு, வாழ்த்து விலக்கு முதலிய பலவகையாக வந்திடும். இது தண்டியலங்காரம் 58, 63, 61, 43, 44 ஆகியவற்றைத் தழுவியது. ஏது அணியைத் தண்டியலங்காரம் காரகம், ஞாபகம் என்று இரு வகைப்படுத்தியுள்ளது. தோற்ற ஏது என்பது தண்டியில் ‘ஒருங்குடன் தோற்றம் என்று கூறப்பட்டுள்ளது. விலக்கு அணி பொருள், குணம், காரணம், காரியம் என்று நான்கு வகையால் வரும் என்று முதலில் விளக்கி விட்டு (44) அடுத்த சூத்திரத்தில் வன்சொல். வாழ்த்து முதலிய பதின்மூன்று பாகுபாடு உடையது என்று தண்டி கூறியிருக்க இங்கு மொத்தமே ஆறுவகையே பேசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 189. | வந்தபொருட், குணம்,சிறப்பின், உண்மையைவே றுஒன்றான் மறுப்பதுஅவ னுதி;விறல்சீர் உயர்ப்பதுஉ தாத்தமாம்; முந்திருசொற் பொருள்எழுத்து முறை,எதிரால் நிரலே முடித்தல்நிர னிறையா(ம்);முன் முரண்தொடையே முரணாம்; நிந்தைசெயப் பிறபுகழ்தல் மாறுபடு புகழா(ம்); நிகழ்குறிப்பைப் பிறிதொன்றால் மறைத்தல்; இலே சம்தாம் பந்தியுடன் புகழ்வதுபோல் பழித்தல், பழித் திடல்போல் புகழ்தல்,இவை இரண்டும்இலே சம்பொருந்தி வருமே [11] | அவனுதி, உதாத்தம், நிரனிறை, முரண், மாறுபாடு புகழ், இலேசம் ஆகிய அணிகளை விளக்குகின்றது. |