மேலே (சூத். 18) ஒளகாரக் குறுக்கம் மொழிமுதலில் மட்டும் என்று கூறியதால் ஒளகாரக்குறுக்கம் ஒரு மாத்திரை பெறும் இடம் இல்லை என்று கொள்ளவேண்டும். மாத்திரை அளபிறந்து ஒலிக்கும் இடங்களாக நன்னூலார் இசை, விளி, பண்டமாற்று முதலியனவற்றைக் (நன். 101) குறிப்பார். முத்துவீரியம் (எழு: 105) புலம்புதலையும் ஓரிடமாகச் சேர்த்துக் கூறும். இந்த இரண்டையும் சேர்த்ததோடு புதிதாக மகிழ்ச்சியையும் ஓரிடமாகச் சேர்த்துள்ளார். 21. | வந்த வுயிர் க ச த ந ப ம வ் வில் என்பானான்கும் வஞய வெட்டாறு (ஆ)று லாடவிற் சிலவு முதற்காம்; அந்தம் இவற்றைந்து ஙவ்வுஞ் சுட்டுவினாவினுமாம் ஆவி ஞண நமன யரல வழள குற்றுகரக்கு அந்தம் இருபானான்கும் இறுதிநிலையெழுத்தாம்; கசதப நீத்து ஈரெழுமெய் மயக்கமாம் ரழ நீத்து இந்திரண்டெட்டு (உ)டநிலையாம்; உயிர்மெய் யவ்வமயக்காம் யரழமுன் க ச த ப ங ஞ ந ம ஈறொற்றியல்பே (9) | இது மொழி முதல், இறுதி, இடைநிலை ஆகியன உணர்த்துகின்றது. உரை : எல்லா உயிர் எழுத்துக்களும் க, ச, த, ந, ப, ம ஆகிய ஆறு மெய்களும் எல்லா உயிரோடும் கூடி மொழிக்கு முதலாக (84 எழுத்துக்கள்) வரும். வகரமெய் எட்டு மெய்யோடும் யகரம் ஆறுமெய்யோடும் ஞகரம் ஆறு மெய்யோடும் மொழிக்கு முதலாக வரும் (மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் மொத்தம் 104 ஆகும்.) ஙகரம் சுட்டெழுத்துக்களோடும் வினாவெழுத்தோடும் சேர்ந்து மொழிக்கு முதலாக வரும். பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள ஆகிய மெய்யெழுத்துக்களும் குற்றியலுகரமும் ஆக 24 எழுத்துக்களும் மொழிக்கு இறுதியில் வரும். க, ச, த, ப, ஆகிய நான்கு மெய்கள் நீங்கிய ஏனைய 14 மெய்யெழுத்துக்கள் வேற்றுநிலை மெய்ம் மயக்கமாகவும், |