சுவாமிநாதம்31எழுத்ததிகாரம்
 

மொழி ஈற்றெழுத்துக்கள்:

உயிர்: பல, பலா, கரி, தீ, கடு, பூ, சேஎ, பகை, நொ, நோ, கௌ.

மெய்: உரிஞ், மண், வெரிந், மரம், மான், தாய், தேர், கால், தெவ்,
     ஆள், வாழ், காடு.

வேற்றுநிலை மெய்ம்மயக்கம்:

     வெட்கம், கற்க, அங்கு, அஞ்சு, உண்டு, ஒன்று, பந்து, அம்பு,
     ஆய்க, தேர்க, வெல்க, தெவ்யாது, வாழ்க, மீள்க.

உடனிலை மெய்ம்மயக்கம்:

     பாக்கம், அங்ஙனம், அச்சம், அஞ்ஞானம், எட்டு, எண்ணி பத்து,
     வெந்நீர், அப்பா, அம்மா, தொய்யில், அல்லல், எவ்வம்,
     வெள்ளம், காற்று, அன்னை.

ஈரொற்று: மூன்று மெய்யெழுத்துக்களின் மயக்கம் ஆயினும் தமிழ் எழுத்தில்
எழுதும் போது இரண்டு மெய்யெழுத்துக்களாகவும் மற்றொன்று
உயிர்மெய்யாகவும் அமைவதால் தான் ஈரொற்று எனப்பட்டது.

     தேய்க்க, பார்க்க, வாழ்க்கை
     வாய்ச்சி, நேர்ச்சி, மகிழ்ச்சி
     பொய்த்தல், பார்த்தல், வாழ்த்து
     வாய்ப்பு, வார்ப்பு, காழ்ப்பு
     தேய்ந்து, தேர்ந்து, வாழ்ந்து
     மொய்ம்பு ... ...
     மொய்ம்மை ... ...

22. இயலுங் கம்முன் கவ்வும் வம்முன் யவ்வு(ம்) ஞ நமுன்
     இனமும் யவ்வும் யரழவின்முன் முதன்மெய்யும் மம்முன்
பயவவுமாம் டறமுன்னே கசபவுமாம் லளமுன்,
     பகசவய வா(ம்) னணமுன்னின மொடுங் க ப ச ஞ