23. |
எழுத்தொன்று பலபொருளைத் தரிற்பதம்; பகாமையி னைப் பகுமையாம் அதிற்பகாமை யிடுகுறியாய் மொழிப் பகுப்பாற் பயனில் பெயர் வினையொடு (இ)டைஉரி | |
யா(ம்); |
| |
முயல்பகாப் பதம்;தொடர்ச்சொல் இரண்டினுட் படாமல் விளைத்தபெயர் முற்று எச்சம் பிறவுமாய் பகுதிவிகுதி இடைநிலையே சாரியை சந்தி விகாரம், பழுத்த கருவிகளின் ஏற்பன கொண்டுமுடியும் பகுபத(ம்) முன் மூன்றிவைக் காம்ஏனைசில புலுமே. (1) | பதத்தின் பொது இலக்கணமும் பகுபத பகாப்பதப் பாகுபாடும் பகுபத உறுப்புக்களும் கூறுகின்றது. உரை: ஒரு எழுத்தோ பல எழுத்தோ ஒரு பொருளைத் தந்தால் ‘பதம்’ ஆகும். அது, பகாமை (பகாப்பதம்), பகுமை (பகுபதம்) என இருவகைப்படும். அவற்றில் பகாமைப் பதம் (பகாப்பதம்) என்பது இடுகுறியாய், பகுத்தால் பயனில்லாததாய்ப் பெயர், வினை, இடை, உரி என நான்கு வகைப்படும். பெயர், வினைமுற்று, வினையெச்சம், பெயரெச்சம் முதலியனவாய்ப் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்ற உறுப்புக்களைக் கொண்டு இவற்றுள் ஏற்பன கொண்டு முடிவது பகுபதம். |