28. | உயிர்மெய்முத லீறாகும் இருபதந்தம் மொடு வேறொடு(ம்) நாற்சந்தியின் பொருளாளின்மொழி அம்மொழியாய் இயல்புவிகா ரத்தினாற்புணர் வாம்;எண் மூன்றுஈற்ற நானாற்சொலின் முன்னானாற் சொற்புணரின் அயிரும் உயிர்வருக்கம் வரிற்சாரியை யொற்றீற்று ஒன்றுஅணுகி யுருப்போய் ஒலியாமூ வருக்கம் வருங்காற் பயிலியன்மிக் குறழ்திரிவு கெடன்மாற லாறு பான்மையவாய் எவ்வழிக்கும் ஏற்கு முடிவுடைத்தே. (1) | புணர்ச்சியின் பொது விளக்கம் கூறுகின்றது. உரை : உயிரையும் மெய்யையும் முதலாகவும், ஈறாகவும் உடைய பகுபதம், பகாப்பதம் ஆகிய இரண்டு சொற்களும் தம்மொடு தாமும் பிறவொடு பிறவுமாய் உயிரீற்றுச் சொற்கள் உயிர்முதன் மொழியோடும் மெய்யீற்றுச் சொற்கள் மெய்முதன் மொழியோடும் உயிரீற்றுச் சொற்கள் மெய் முதன் மொழியோடும் மெய்யீற்றுச் சொற்கள் உயிர் முதன் மொழியோடும் புணரும் போதும் இயல்பாகவும் விகாரமாகவும் புணரும். இருபத்து நான்கு எழுத்துக்களை ஈற்றில் (12 உயிர், 5 மெல்லினம், 6 இடையினம், 1 குற்றியலுகரம்) உடைய சொற்கள் பதினான்கு வகைச் சொல்லோடு (பெயர் முன்பெயர், வினை, இடை, உரி; வினைமுன் பெயர், வினை, இடை, உரி; இடைமுன் பெயர், வினை, இடை, உரி; |