113-ஆம் சூத்திரத்தையும் (தோன்றல், திரிதல், கெடுதல், நிலைமாறுதல் என நான்காம் புணர்ச்சியில் விகாரம்) தழுவி எல்லா வகைப் புணர்ச்சி மாற்றத்தையும் சேர்த்து ஆறுவகை என்று சொல்லியுள்ளார். இவர் உறழ்ச்சியைத் தனி வகையாகக் கொண்டுள்ளார். ‘பொருளாளின் மொழி’ என்பதற்கும் ‘சொற்புணரின் அயிரும்’ என்பதற்கும் பொருள் விளங்கவில்லை. 29. | உடலின்உயிர்ஒலி யுறல்குற்றொற்று (உ)யிர்கண்டிரட் டல்,உவ் வழிந்தவ்வொற் றின்உயிர்ஒலி ஏறல்; உயிரின் இடம்வன்மை வரினதுவே யினமேதான் மிகுத்தல்; ஈறுகுறுகு தல்குறுகி யுவ்வேற்றல்; முதலே கெடுதன் முதற்குறுக்கு,முதல் அலதுஏகல், நடுவே கெடுதல், நிலை இடை மிகல்சொற்கெடல் ஒற்றுவ் வேற்றல், கடையில்ஒற்றை யிரட்டை பலகெடுதல் அளபேற்றல் காணுமுயிர் வரடணவ தாகயண வுதலே. (2) | புணர்ச்சியைத் தொகுத்துக் கூறுகின்றது. 1. மெய்யெழுத்துமேல் உயிரெழுத்துவரின் பொருந்தும், 2. குறிலை அடுத்து வரும் மெய்யெழுத்துமுன் உயிர்வரின் இரட்டும். 3. குற்றியலுகர ஈற்றின்முன் உயிர்வரின் உகரம் கெட்டு நின்ற மெய்யின் மேல் உயிர் பொருந்தும். 4. உயிர் ஈற்றுச் சொல்முன் வன்மை வந்தால் வல்லினம் மிகும். 5. இனமான மெல்லினம் மிகும். 6. ஈற்று உயிர் குறுகும்; 7. குறுகி உகரம் ஏற்கும். 8. வருமொழி முதல் கெடும். 9. முதல் குறுகும். 10. முதல் அலது ஏகும். 11. நடுவே கெடும். 12. இடை மிகும். 13. சொல் கெடும். 14. ஒற்று உகரம் ஏற்கும். 15. ஈற்றயல் ஒற்றிரட்டும். 16. பல கெடும். 17. அளவு ஏற்கும். 18. உயிர்வரின் டகரம், ணகரமாக மாறிப் பொருந்தும். மெய்யெழுத்துமேல் உயிரெழுத்துப் பொருந்தும் என்ற விதி தனிக்குறிலை அடுத்துவராத மெய்யெழுத்துக்கே பொருந்தும். |