| பொன் + நன்று பல் + நன்று எள் + நன்று | = பொன்னன்று: னகரமும் நகரமும் ‘ன்ன்’ ஆயிற்று. = பன்னன்று: லகரமும் நகரமும் ‘ன்ன்’ ஆயிற்று. = எண்ணன்று: ளகரமும் நகரமும் ‘ண்ண்’ ஆயிற்று. | 31. | நிலையிகரம் உவ்வுறன்;மூ வினந்தாந் தாம் உறழ்தல்; நிலைமொழிமா றுதல்;ஐகான் அவ்வாவாகுதலே; யிலகுணள வாதல்;பல விதிபெறுதல்; இடைச்சொல் இசைதல்முப் பான்மூன்றில் எல்லாம்அடங்கும் ஒவ்வாதனவும் அலபுணர்ச்சி வரினும்அடக்குக; ற,ன,ழ,எவ்,வொவ், அலதுஉயிர்மெய் உயிரளபு அல்சார்பு வினைவிகுதி மலிதமிழ்க்குச் சிறப்பாகும்; உயிரானொற் றிருபான்வரு மிலிங்க மூன்று வடமொழிச்சிறப் பாங்காணே. (4) | சில புணர்ச்சி விதிகளும் தமிழ்மொழிக்கும் வடமொழிக்குமுள்ள சிறப்புப்பண்புகளும் விளக்குகின்றது. உரை: 28. நிலைமொழி இகரம் உகரமாக மாறும். 29. இகர ஈறு வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூன்று முதல் மொழியோடும் சேர்ந்தால் உறழ்ச்சியும் நிலைமொழி மாற்றமும் பெறும். 30. ஐகார நிலைமொழி அகரமாக மாறும். 31. ணகரம் ளகரமாக மாறும். 32. பல விதிகளைப் பெறும். 33. இடைச்சொல் சேரும், ஆகிய முப்பத்து மூன்று புணர்ச்சி விதிகளில் ஏனைய புணர்ச்சி மாற்றங்களையும் அடக்கிக் கொள்ளலாம். ற, ன, ழ, எ, ஒ அல்லாத முதலெழுத்துக்களும் உயிர் மெய்யும் உயிரளபெடையும் நீங்கிய சார்பெழுத்துக்களும் திணை உணர்த்தும் வினை விகுதியும் தமிழுக்கே சிறப்பாக உரியன. உயிர் எழுத்துக்களில் ஆறு எழுத்துக்களும் மெய்யெழுத்துக்களில் இருபது எழுத்துக்களும் மூன்று லிங்கமும் |